உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் என்பது இனி கட்டாயம்; பிரதமர் மோடி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் என்பது இனி கட்டாயம்; பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜோகன்னஸ்பர்க்: ஐ.நா.,வில் சீர்திருத்தங்கள் என்பது இனி கட்டாயம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது; உலக நாடுகள் மத்தியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பு என்பது தேவை. இங்கு பயங்கரவாதத்தை எதிர்த்து செயல்படுவதில் இரட்டை நிலைப்பாடு என்பதற்கு இடமே இல்லை.இந்த கூட்டம் 3 நாடுகளின் குழுக்கள் கூட்டம் அல்ல. மாறாக, 3 பெரிய ஜனநாயக நாடுகள் மற்றும் 3 பெரிய பொருளாதாரங்களை இணைக்கும் ஒரு முக்கிய தளம். நம் ஒவ்வொருவரின் முன்னேற்றத்தை நாம் பாராட்டிக் கொள்ளலாம். இது வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறும்.ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் என்பது இனிமேல் ஒரு விருப்பம் அல்ல, மாறாக அது கட்டாயம். கல்வி, சுகாதாரம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், சூரிய ஒளிசக்தி போன்ற துறைகளில் 40 நாடுகளின் திட்டங்களில் இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா நாடுகளின் பணி பாராட்டத்தக்கது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ