உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேச்சு; முக்கிய ஆலோசனை

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேச்சு; முக்கிய ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனா சென்றுள்ள பிரதமர் மோடி நாளை ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், இன்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் தொலைபேசியில் உரையாடினார்.ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக சீனாவுக்கு சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தியான்ஜெனில் நாளை நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=in6jrx7o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் தொலைபேசியில் உரையாடினார். இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டதற்காக அதிபர் ஜெலென்ஸ்கிக்கு நன்றி. நடந்து வரும் மோதல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவை வழங்குகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
ஆக 31, 2025 19:07

எல்லாத்தையும் ஒட்டு கேட்டிருப்பாங்க புட்டினும், ஜிங் ஜிங்கும். அதான் சீனாவோடு சேர்ந்து ப்ரிக்ஸை பலப்படுத்துவோம்னு புட்டின் சொல்லிட்டாரு.


venkat eswaran
ஆக 31, 2025 01:09

தங்களது உலக அறிவை கண்டு மெச்ச வேண்டும்..


Ramesh Sargam
ஆக 31, 2025 00:42

நமது பாரத பிரதமரின் முயற்சியால் போர் முடிவுக்கு வந்தால் மிகவும் சிறப்பு. அந்த நோபல் பரிசை வேண்டுமென்றால் அந்த ஏழு போரை நிறுத்தியதாக கூறும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வேண்டுமென்றால் கொடுத்துவிடலாம். ஆனால் உலக மக்களுக்கு நன்றாக தெரியும் அந்த பரிசுக்கு உரிய உண்மையான தலைவர் யார் என்று. அது போதும்.


ManiMurugan Murugan
ஆக 30, 2025 23:24

அருமை


சிட்டுக்குருவி
ஆக 30, 2025 22:45

செய்தியை முழுமையாக படித்தறிந்து கருத்தை பதிவுசெய்யவேண்டும் .நாளை ரஷ்யா அதிபருடன் பேச இருக்கின்றார் .அதனால் உக்ரைன் அதிபருடன் பேசி கருத்தறிந்து அதற்க்குத்தக்க பேசுவார் .


K.n. Dhasarathan
ஆக 30, 2025 21:55

பிரதமரே ஜெலென்ஸ்கி உடன் பேசி என்ன பயன் ? ஒன்று இஸ்ரேல் பிரதமருடன் அல்லது ரஸ்சியா அதிபருடன் பேச வேண்டும், அவர்கள் தானே போரை நிறுத்தாமல் கொண்டு செய்கிறார்கள். அதை விடுத்து, உக்ரைன் அதிபருடன் என்னத்த பேசி என்ன செய்ய ? பாவம் அவருக்கு நல்ல வழி காட்டுங்கள்


vivek
ஆக 31, 2025 00:50

அலுமினிய தட்டு தசரதா...உனக்கு என்றுமே இதே தட்டுதான்


JaiRam
ஆக 30, 2025 21:54

உக்ரைன் அதிபர் திருட்டு திராவிட பரம்பரை... அவன் ஊழலில் கருணாநிதிக்கே ஆசான்


Nada raja
ஆக 30, 2025 21:36

உக்கிரன் அதிபரும் திருந்த மாட்டார் ரஷ்ய அதிபரும் முட்டுக் கொடுக்க மாட்டார்


புதிய வீடியோ