உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எல்லையில் அமைதி, பரஸ்பர நம்பிக்கை ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

எல்லையில் அமைதி, பரஸ்பர நம்பிக்கை ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

கஸான், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நடந்த இரு தரப்பு பேச்சின்போது, ''எல்லையில் அமைதி நிலவுவதை உறுதி செய்வதே நம் முன்னுரிமையாக இருக்க வேண்டும். பரஸ்பரம் நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்வுகளை மதித்து நடப்பதே, இரு தரப்பு உறவின் அடிப்படையாக இருக்க வேண்டும்,'' என, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கிடம், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.நம் அண்டை நாடான சீனாவுடன் எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. இந்நிலையில், எல்.ஏ.சி., எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், கிழக்கு லடாக்குக்குள் நுழைய, 2-020 மே மாதம் சீன ராணுவம் முயன்றது. இதை, நம் படைகள் தடுத்து நிறுத்தின. இரு தரப்பு வீரர்களும் முறைத்துக் கொண்டிருந்த நிலையில், ஜூன் மாதம் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டன.இது, இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. பல நிலைகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த பேச்சுக்குப் பின், சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, 2020 மே மாதத்துக்கு முன் இருந்த நிலையிலேயே, எல்லையில் இரு நாடுகளும் ரோந்துப் பணிகளை தொடர, இந்த உடன்பாடு வழிவகுத்தது. மேலும், எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதற்கான வழியையும் ஏற்படுத்தி தந்தது.இது நடந்த 72 மணி தொடர்ச்சி 11ம் பக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ