உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு; ஜோர்டானுக்கு பிரதமர் மோடி பாராட்டு

பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு; ஜோர்டானுக்கு பிரதமர் மோடி பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அம்மான்: பயங்கரவாதத்திற்கு எதிரான ஜோர்டானின் நிலைப்பாட்டுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.இரண்டு நாள் பயணமாக, ஜோர்டான் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் வரவேற்றார். பின்னர்ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் உடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=amintng7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜோர்டானுக்கு தனது பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும். பயங்கரவாதத்திற்கு எதிராக ஜோர்டான் நாடு தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. காசா பிரச்னையில் நீங்கள் ஆரம்பத்திலிருந்தே மிகவும் சுறுசுறுப்பான பங்களிப்பை வழங்கி வருகிறீர்கள். இப்பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம்.ஜோர்டான் பயங்கரவாதத்திற்கு எதிராக, அனைத்து மனிதகுலத்திற்கும் ஒரு வலுவான செய்தியை அனுப்பி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பின்னர் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் பேசியதாவது: பிரதமர் மோடியின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான பல ஆண்டு கால நட்பு, பரஸ்பர மரியாதையை பிரதிபலிக்கிறது. இந்தியாவும், ஜோர்டானும் வலுவான கூட்டாண்மையையும், தொலை நோக்குப் பார்வையையும் கொண்டுள்ளன. பல ஆண்டுகளாக, இருநாடுகளுக்கு இடையே உறவுகள் பல துறைகளில் விரிவடைந்துள்ளது. தொழில், விவசாயம் மற்றும் எரிசக்தி போன்ற பல துறைகளில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த உதவும். இவ்வாறு மன்னர் இரண்டாம் அப்துல்லா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
டிச 16, 2025 12:35

தொப்புள்கொடி உறவெல்லாம் இல்லையா?


Amruta Putran
டிச 16, 2025 07:32

do you know Jordan king is direct descendants of Nabi. He himself appreciates and respects PM Modi


Santhanam
டிச 16, 2025 03:07

நீ இந்த ஒண்ண வச்சே ஆட்சி பண்ணு ராசா... மக்களும் நம்பிடறாங்க பாவம்...


Skywalker
டிச 16, 2025 08:12

WE WILL CRUSH TERRORISM, EXTREMISM, ANTI NATIONALS ETC NO TOLERANCE FOR HATE


முக்கிய வீடியோ