உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க பல்கலையில் அரசியல் கொலை!

அமெரிக்க பல்கலையில் அரசியல் கொலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமெரிக்காவின் உடா பல்கலையில் நேற்று உரை நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்று இருந்த பிரபல அரசியல் பிரமுகரும், டர்னிங் பாயிண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான சார்லி கிர்க் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.சார்லி கிர்க், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர், பழமை வாத கொள்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய் செய்து பிரபலமானவர். அவரது படுகொலைக்கு, அமெரிக்காவின் இரு முன்னணி அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6qevenw8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 அதிபர் டிரம்ப் கூறுகையில், சார்லி படுகொலைக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். அவர் அனைவராலும் விரும்பப்பட்ட ஒருவர் என்று தெரிவித்துள்ளார். படுகொலை தொடர்பாக முதலில் ஒருவரை பிடித்து விசாரித்து வந்த போலீசார், இப்போது அவரை விடுவித்து விட்டனர். கொலையாளியை தேடும் பணி முழு வேகத்தில் நடந்து வருகிறது.சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், சுடப்பட்ட உடனே சார்லி வாகனம் ஒன்றில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல் நிலையை பரிசோதித்தவர்கள் இறந்து விட்டதாக அறிவித்தனர் என்றார்.யார் இந்த சார்லி கிர்க் 32 வயதான சார்லி, சிகாகோ நகரில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவின் முக்கிய வலதுசாரி அரசியல் பிரமுகர்களில் ஒருவர். எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.தேசிய கொள்கைக்கான கவுன்சிலிங் உறுப்பினராக இருந்தவர். வலதுசாரிகளின் மிக முக்கியமான குரல்களில் ஒருவர் என்று அவரை சில ஆண்டுக்கு முன் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.கொலை நடந்த பல்கலைக்கு செப்டம்பர் 15 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாவலர்கள் ஒருவர் கூட இல்லை என்று நேரில் பார்த்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V.Mohan
செப் 16, 2025 14:12

பயங்கரவாதம் எந்த வகையிலும் நாட்டில் நுழைய அனுமதிக்காமல் இருந்தால் தான் இது போன்ற கொலைகளை தடுக்க முடியும். ஒரு பக்கம் பாக்கிஸ்தான் நாட்டு அயோக்கிய ராணுவத்தையும், அந்த ராணுவம் வளர்க்கும் அல்குவைதா போன்ற தீவிரவாத கொலை கும்பல்களையும் அமெரிக்கா பாலூட்டி வளர்க்கிறது. அதனால் முதலில் அமெரிக்கா தன் கொள்கையை மாற்றினால் தான் இப்படிப்பட்ட கொலைகளை தடுக்க இயலும், அர்த்த நாரீஸ்வரர் மாதிரி இரண்டு வித்யாசமான கொள்கைகளுடன். நாட்டை ஆள முடியாது.


N.Purushothaman
செப் 11, 2025 09:13

அமெரிக்காவின் அரசியல் படுகொலைகள் பாரதத்தில் நடக்கும் அரசியல் படுகொலைகளை விட கொடூரமானது ...


VIJAY
செப் 11, 2025 08:26

அமெரிக்கா மோசமான கொள்கைகள் கொண்ட தேசமாக மாறிவிட்டது ...


sekar ng
செப் 11, 2025 08:06

அமெரிக்க முன்னேறிய நாடல்ல. அதிபர் டிரம்ப் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு மட்டும் பிரீ விசா வழங்கி இந்திய எதிப்பை காட்ட பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்துகிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை