உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எவ்வளவு அடித்தாலும் திருந்தாத பாக்., பயங்கரவாத மாநாட்டில் பூச்சாண்டி

எவ்வளவு அடித்தாலும் திருந்தாத பாக்., பயங்கரவாத மாநாட்டில் பூச்சாண்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கராச்சி:'டில்லியில் காலை உணவு சாப்பிட்டு விட்டு, எங்கள் கொடியை ஏற்ற விரும்புகிறோம். பாகிஸ்தானுடன் மோதும் முன், 100 முறை யோசிக்க வேண்டும்' என, அந்நாட்டு பயங்கரவாத அமைப்பு கூட்டத்தில் மத அடிப்படைவாதிகள் வாய் சவடால் விட்டுள்ளனர். 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் நம்மிடம் மரண அடி வாங்கியும் பாகிஸ்தான் திருந்துவதாக தெரியவில்லை. பாக்., பயங்கரவாதிகளை ஆதரித்து வரும் திபா - இ - வதன் கவுன்சில் சார்பில், கராச்சியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் மாநாடு நடந்தது. இதில், லஷ்கர் - இ - தொய்பா, அஹ்ல் - இ - சுன்னத் வால் ஜமாத் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பினரும், பல்வேறு முஸ்லிம் மதகுருமார்களும் பங்கேற்று, இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை பேசினர். குறிப்பாக, மதகுருமார்களில் ஒருவரான முப்தி தாரிக் மசூத் என்பவர் பேசுகையில், 'நம் எதிரியான இந்தியா, நம் ராணுவத்தை மதம் சார்ந்து செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது. 'துரோகம் செய்பவர்கள் என குறிப்பிட்டுள்ளது. நம் ராணுவம் மதச்சார்பற்றதல்ல; தியாகத்தில் ஆர்வம் கொண்ட மதம் மற்றும் இஸ்லாமின் பெயரால், அல்லாவின் பெயரால் உயிர்த் தியாகம் செய்யும் ராணுவம்' என, குறிப்பிட்டுள்ளார். ஜாமியத் உலமா - இ - இஸ்லாம் அமைப்பின் பொதுச்செயலர் அல்லமா ரஷீத் மஹ்மூத் சூம்ரோ பேசுகையில், 'நாங்கள் காலை உணவை டில்லியில் சாப்பிட விரும்புகிறோம். அங்கு பாகிஸ்தான் கொடியை ஏற்ற விரும்புகிறோம். எங்களுடன் மோதுவதற்கு முன், 100 முறை யோசிக்க வேண்டும்' என்றார்.பயங்கரவாத அமைப்பும், மதகுருமார்களும் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதை அந்நாட்டு அரசோ, ராணுவமோ கண்டிக்கவில்லை. இதன் வாயிலாக, அவர்களின் வெறுப்பு பேச்சுக்கு அனுமதி வழங்கியுள்ளதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sevegamy Suntheresan
மே 15, 2025 12:45

பாகிஸ்தான் என்றுமே திருந்தாது. இந்தியாவில் இருந்து பிரிந்த ஒரு நாட்டுக்கு, மற்ற நாடுகள் ஆதரிப்பது பெரும் அவமானமே. ஏன் ஆஃப்கனிதான், ஈராக் இரு நாட்டையும் அழித்த போது யாரும் வாய் திறக்க வில்லை. வல்லரசு நாடு என்பதாலா. இந்தியா என்ன, எதற்க்கு பயங்கவாததிர்க்கு அடி பணிந்து போக வேண்டும்?. தாய் நாடான இந்தியாவிற்கு தான் என்றும் நாங்கள் மரியாதை செலுத்துவோம். வெளிநாட்டவர்கள் ஆனாலும் எங்களுக்கு தாய் நாடு இந்தியாதான்


Ravi Kulasekaran
மே 15, 2025 10:54

அடி போதாது பலுசிஸ்தான் விடுதலக்கு இந்தியா ஆதரவு தரவேண்டும் இரு முனை தாக்குதல் கஷ்மீர் ஆக்கிரமிப்பு பலுசிஸ்தான் இருமுறை தாக்குதல் காலி செய்ய வேண்டும் பாகிஸ்தான்


Ganapathi Amir
மே 15, 2025 09:39

அந்த மாநாட்டில் ஒரே ஒரு அக்னி ஏவுகணையை ஏவி இருக்கலாம்.. இந்தியா பயங்கரவாதிகளை மொத்தமாக அழிக்கும் வாய்ப்பை தவற விட்டுவிட்டது ...


SIVA
மே 15, 2025 09:21

பாகிஸ்தானின் பிரச்சனை மதம் அல்ல, அங்கு உள்ள ஊழல்வாதிகளே அதை அவர்கள் மறைக்க பயன்படுத்தும் கேடயம் மத பற்று, இந்தியா எதிர்ப்பு இதை காரணமாக வைத்து அவர்கள் கொள்ளை அடிக்கின்றனர், மக்களை யோசிக்க விடுவதில்லை, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க சில நாடுகளுக்கு பாகிஸ்தானின் உதவி தேவை, அதனால் பாகிஸ்தானை முற்றிலும் அழிப்பது கடினம், ஆனால் அவர்களை பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் செய்ய விடாமல் தடுக்க வேண்டும், அந்த தீவிரவாத நாட்டுக்கு பயம் கொடுத்துகொண்டேய இருக்க வேண்டும், முன்பு அதை தாக்குவோம் இதை தாக்குவோம் என்று வீர வசனம் பேசுவார்கள், இப்போது அவர்களுக்கு பயம் வந்து விட்டது இது அதே அளவில் தொடர வேண்டும்...


anonymous
மே 15, 2025 08:33

சிந்துவையும் POK வையும் உடனடி இந்தியாவுடன் இணைக்கவும். பலோச் மக்கள் தனி நாடு பெறுவர். பாகிஸ்தான் தனது கப்பல்களை துருக்கியில் நிறுத்தட்டும். பின்னர் காலை மாலை உணவுகளுக்கு இடங்களை தேர்வு செய்யலாம்


kumarkv
மே 15, 2025 08:21

இந்தியா இந்த இஸ்லாமிய மிருகங்கள் மாநாட்டில் குண்டு வீசி அவைகளை அழித்து இருக்க வேண்டும்


R. SUKUMAR CHEZHIAN
மே 15, 2025 07:12

ஆடிய காலும், பாடி வாயும், சும்மா இருக்காது அதுபோல் தான் பாகிஸ்தான் பிரிவினை, இந்து எதிப்பு, பாரதத்தை பற்றி தவறான கருத்தில் கருவில் இருந்து ஊட்டி வளர்க்கப் பட்ட மத காழ்ப்புணர்ச்சி கொண்ட கும்பல்கள் இவர்கள் சுடுகாடு போகும் வரை திருந்த வாய்ப்பே இல்லை.


karthikeyan
மே 15, 2025 06:19

வீட்டுக்கும் நாட்டுக்கும் உபயோகம் இல்லாத நாய்கள் அவர்கள் பற்றிய செய்திகள் எதற்கு ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை