வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரிப்.... ஆழ்ந்த இரங்கல்
வாட்டிகன் சிட்டி: கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல் புனித மேரி மேஜர் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.போப் பிரான்சிஸ், வாட்டிகன் சிட்டியில் கடந்த ஏப்., 21ம் தேதி காலமானார். அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக, அங்குள்ள புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vtcbe8w9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கடந்த 3 நாட்களில் மட்டும் 2.5 லட்சம் பேர் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) நடைபெற்றது. அவரது விருப்பத்தின் படி எளிய முறையில் இறுதி சடங்கு நடந்தது. பின்னர் புனித மேரி மேஜர் பேராலயத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட போப் பிரான்சிஸ் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இந்திய அரசு சார்பில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ரிப்.... ஆழ்ந்த இரங்கல்