உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏழைநாடுகளின் கடன் ரத்து: உலகத்தலைவர்களுக்கு போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

ஏழைநாடுகளின் கடன் ரத்து: உலகத்தலைவர்களுக்கு போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாடிகன் சிட்டி: 'ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்வதன் மூலம் ஒரு நல்ல முன்மாதிரியை அமைக்க வேண்டும்,' என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார்.உலகம் முழுவதும் புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டது. செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புத்தாண்டு தினத்தில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.அதனை தொடர்ந்து மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் பேசியதாவது:உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள், எந்தவொரு நாடும் மக்களும் கடனினால் நசுக்கப்படக்கூடாது. எங்கள் தந்தையிடம் நாம் எப்போதும் கேட்பது போல், கடனை முதலில் மன்னிப்பவர் கடவுள். ஆகையால் ஏழை நாடுகள் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.ஏழ்மையான நாடுகளின் கடன்களை ரத்து செய்வதன் மூலம் அல்லது கணிசமாகக் குறைப்பதன் மூலம் முன்னுதாரணமாக இருக்கும்படி கிறிஸ்தவ பாரம்பரியங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.உலகெங்கிலும் உள்ள மோதல்கள் நிறைந்த பகுதிகளில், நீதி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கு ராஜதந்திர ரீதியாக உழைக்கும் அனைவருக்கும் நன்றி.மோதலால் பாதிக்கப்பட்ட பல பிராந்தியங்களில், பேச்சுவார்த்தைகளை நடத்துபவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. அனைத்து சண்டைகளும் முடிவுக்கு வரவும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் தீர்க்கமான கவனம் செலுத்தவும் பிரார்த்தனை செய்வோம். போர் அழிவை நோக்கிதான் செல்லும், அது எப்போதும் அழிவைதான் தரும். போர் எப்போதும் தோல்விதான். அமைதிக்காக பாடுபடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.இவ்வாறு போப் பிரான்சிஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankar
ஜன 03, 2025 07:45

போர்களின் மூலம்தானே உங்கள் மதம் பரப்பப்பட்டது, அடுத்தவனுக்கு மட்டும் ஆலோசனை


தமிழ்வேள்
ஜன 02, 2025 20:37

இவர்களது தசமபாகம் கொள்ளை கஜானா வை திறந்தால் அகில உலகத்திலும் ஏழ்மை காணாமல் போய் விடுமே?....


Rpalni
ஜன 02, 2025 05:46

சோர் த்ரவிஷ மாடல் போப்ப்பிடமே போய் சேர்ந்துடுச்சா?


கிஜன்
ஜன 01, 2025 22:38

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .... 2025 சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்வோம் ....


Ganapathy
ஜன 01, 2025 22:37

கடன் வாங்கினா திரும்ப கொடுக்கச் சொல்லுயா. ஏழைகளுக்குக் கடன் கொடுத்து கடனை உன் பேச்சைக்கேட்டு திரும்ப கொடுக்காம கடன் கொடுத்த ஏதோ ஒரு வங்கியோ அல்லது தேசமோ நாசமா போனா பரவாயில்லையா போப்பு? கிறிஸ்துவ சாமியாருக்கும் பொருளாதாரத்துக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.


rama adhavan
ஜன 02, 2025 03:00

சரியான ....


சமீபத்திய செய்தி