உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மிரட்டலில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது: போப் வலியுறுத்தல்

மிரட்டலில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது: போப் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரோம்: '' இன்னொருவரின் இருப்பை மற்றொருவர் மிரட்டுவதை அனுமதிக்கக்கூடாது,'' என போப் லியோ வலியுறுத்தி உள்ளார்.இஸ்ரேல் - ஈரான் இடையில் நடக்கும் மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதலில், ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டு உள்ளனர். ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில் போப் லியோ கூறியதாவது: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் பெரிய கவலை அளிக்கிறது. இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.அணுசக்தி அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான உலகத்தை கட்டமைப்போம் என்ற உறுதிப்பாட்டை, நிறைவேற்ற அமைதியான வழியில் நிறைவேற்ற வேண்டும்.நீதி, சகோதரத்துவம் மற்றும் பொது நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீடித்த அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை துவங்கப்பட வேண்டும்.இன்னொருவரின் இருப்பை மற்றொருவர் மிரட்ட அனுமதிக்கக்கூடாது. அமைதிக்கான காரணத்தை ஆதரிப்பது, நல்லிணக்க பாதைகளை துவங்குவது மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் தீர்வுகளை ஊக்குவிப்பது அனைத்து நாடுகளின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kulandai kannan
ஜூன் 15, 2025 20:30

இந்த போப் ஒரு அமெரிக்கர்.நான்கூட யாராவது கன்னியாகுமரி நபர் போப்பாக தேர்வாவார் என்று எதிர்பார்த்தேன்.


Shankar
ஜூன் 15, 2025 00:26

அமெரிக்கா இஸ்ரேல் பின்னாடி தான் இருந்து செய்யுது என உங்களுக்கு தெரியாதா


உண்மை கசக்கும்
ஜூன் 14, 2025 21:06

இவரு கமல் மாதிரி. சொல்றது ஒரு எழவும் புரியாது. தைரியமாக இஸ்ரேல் செய்வது குற்றம் என்று சொல்ல முடியவில்லை


சங்கி
ஜூன் 14, 2025 20:45

முதலில் அணுகுண்டை வீசியவனுக்கு போப் அறிவுரை சொல்லணும். சும்மா உருட்ட கூடாது. எல்லாவிதமான ஆயுதங்களையும் வைத்துக்கொள்ள அனைத்து நாடுகளுக்கும் உரிமைஉண்டு. உலகமே அமெரிக்கா , ஐரோப்பா மட்டும் இல்லை


தியாகு
ஜூன் 14, 2025 23:21

உலக நாடுகளிடம் அணுகுண்டு இருக்கலாம் தவறில்லை, அவர்கள் போரில் மட்டும் எதிரி நாடுகளின் மீது பயன்படுத்துவார்கள், ஆனால் மூர்க்க கும்பலிடம் அணுகுண்டு இருந்தால் பிற மதத்தினரை அழிக்க பயன்படுத்துவார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.


சமீபத்திய செய்தி