உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொகட்டா: கொலம்பியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்ததாவது:தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் இன்று பொகோட்டா அருகே 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் இது மத்திய கொலம்பியா முழுவதும் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.பொகோட்டாவை சேர்ந்த முதியவர் கூறுகையில்,நிலநடுக்கம் தாக்கம் உடனடியாக இருந்தது. கட்டடங்கள் அசைந்தன, சைரன்கள் ஒலித்தன, பீதியடைந்த குடியிருப்பாளர்கள் தெருக்களில் குவிந்தனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி