வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இது அருகாமை நாடான துருக்கியிலே நிகழவேண்டும்
வணக்கம், முன்னரெல்லாம் நிலநடுக்கமென்பது அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜப்பான் நாட்டில்தான். ரிக்டர் அளவு சற்று அதிகம், பாதிப்பு அதிகரிக்கவேண்டும்.
ஏதன்ஸ் : கிரீஸ் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பொதுமக்கள் பீதிக்குள்ளாக்கியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்று கிரீஸ் மற்றும் கிரீட் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது, இஸ்ரேல், எகிப்து, ஸிப்ரஸ் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 6:19 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கிரீட்டின் வடக்கே 69 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பா-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ஆகியவற்றின் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கிரீஸ் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கிரீட் கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது அருகாமை நாடான துருக்கியிலே நிகழவேண்டும்
வணக்கம், முன்னரெல்லாம் நிலநடுக்கமென்பது அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜப்பான் நாட்டில்தான். ரிக்டர் அளவு சற்று அதிகம், பாதிப்பு அதிகரிக்கவேண்டும்.