உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பைனலில் பிரக்ஞானந்தா

பைனலில் பிரக்ஞானந்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செயின்ட் லுாயிஸ்: சின்க்யுபீல்டு கோப்பையில் 2வது இடம் பிடித்த இந்தியாவின் பிரக்ஞானந்தா, கிராண்ட் செஸ் டூர் பைனலுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில், கிராண்ட் செஸ் டூர் 10வது சீசனில் ஒரு பகுதியான சின்க்யுபீல்டு கோப்பை தொடர் நடந்தது. இதன் 9வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா (கருப்பு), அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் (வெள்ளை) மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 32வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ் (கருப்பு), அமெரிக்காவின் பேபியானோ காருணா (வெள்ளை) மோதிய மற்றொரு 9வது சுற்று போட்டி 25வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. ஒன்பது சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சோ வெஸ்லே, பேபியானோ தலா 5.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' பேபியானாவை வீழ்த்திய பிரக்ஞானந்தா, வெஸ்லேயிடம் தோல்வியடைந்தார். வெஸ்லே, பேபியானோ மோதிய போட்டி 'டிரா' ஆனது. முடிவில் வெஸ்லே 1.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பிரக்ஞானந்தா (1.0 புள்ளி) 2வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் குகேஷ் (4.0) 8வது இடத்தை கைப்பற்றினார். இதனையடுத்து கிராண்ட் செஸ் டூர் பைனலுக்கு (செப். 26-அக். 4, இடம்: சாவ் பாலோ, பிரேசில்) தமிழகத்தின் பிரக்ஞானந்தா தகுதி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

r.thiyagarajan
ஆக 29, 2025 09:11

All the best….


தியாகு
ஆக 29, 2025 08:13

பைனலில் பிரக்ஞானந்தா. அதுக்கு இப்ப என்ன பண்ணனும்? நெத்தியில திருநீறு வச்சிருக்கார், அதனால் வாழ்த்தெல்லாம் சொல்லமாட்டோம்.


S.kausalya
ஆக 29, 2025 14:49

உங்க வாழ்த்தை யார் கேட்டாங்க


புதிய வீடியோ