உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹார்வர்டு பல்கலைக்கு அதிக மானியம் வழங்க மாட்டோம்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

ஹார்வர்டு பல்கலைக்கு அதிக மானியம் வழங்க மாட்டோம்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஹார்வர்டு பல்கலைக்கு இனி அதிக மானியங்களை வழங்க மாட்டோம்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: ஹார்வர்டு பல்கலையில் ஒரு பிரச்னை இருக்கிறது. அங்கு 31 சதவீத வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை நிதியுதவியாக வழங்குகிறோம். இது அபத்தமானது. நாங்கள் ஹார்வர்டு பல்கலை க்கழகத்திற்கு அதிக மானியங்களை வழங்கி வருகிறோம். இனி அதிக மானியங்களை நாங்கள் வழங்க மாட்டோம்.ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டினர் குறித்து விவரங்களை சொல்ல மறுக்கிறார்கள். நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். வெளிநாட்டு மாணவர்களுடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். 31 சதவீதம் என்பது மிகவும் அதிகம். அந்த பல்கலைக்கழத்தில் படிக்க விரும்பும் அமெரிக்கர்களுக்கு அங்கு இடம் கிடைப்பது இல்லை.வெளிநாட்டு நிர்வாகம் ஏதும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு நிதி கொடுக்கவில்லை. நாங்கள் தான் செய்கிறோம். வெளிநாட்டு மாணவர்களின் பட்டியலை நாங்கள் பெற விரும்புகிறோம். அவர்கள் நலமாக இருக்கிறார்களா? இல்லையா என்பதைக் கண்டுபிடிப்போம். பலர் நலமாக இருப்பார்கள். இன்னொரு விஷயம் என்னவென்றால், அவர்கள் மிகவும் யூத விரோதிகள். இது அனைவருக்கும் தெரியும். அதை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சித்தறஞ்சன்
மே 26, 2025 15:45

trumph செய்வதில் எந்தவித பிழையும் இல்லை . வெளிநாடுகளில் இருந்து படிக்கவரும் மாணவர்கள் , அரசாங்க பணத்தில் படித்துவிட்டு பின்பு நாட்டுக்கு துரோகம் இழைக்கின்றனர்


rajan_subramanian manian
மே 26, 2025 11:40

எனக்கு என்னவோ டிரம்புக்கும் நம்ப சீமானுக்கும் ஒரே நட்சத்திரம் என்று தோன்றுகிறது. சீமானைப்போலவே இந்த டிரம்பும் பேசுவது பாதி சரியாகவும் மீதி பாதி அபத்தமாகவும் இருக்கு. பழுது என்று மிதிக்கவும் முடியவில்லை பாம்புன்னு தாண்டவும் முடியவில்லை.அப்பாடா நம்ப சுடலை போல மதில் மேல் என்று தப்பாக உளறவில்லை


visu
மே 26, 2025 10:17

வெளிநாட்டு ஆனவர்கள் விசா பெறும்போதே ஹார்வார்டில் சேருகிறோம் என்றுதானே விசா வாங்கி இருப்பார்கள் கொஞ்சம் தேடினால் சுலபமாக கிடைக்கும் இந்த பல்கலைகள் பெரும்பாலும் இடதுசாரி மற்றும் யுத எதிரிகள் தேச விரோதிகள் இடது சாரிகள் பெரும்பாலும் வலது சாரிக்களை அழித்துவிட முயற்சிப்பார்கள் அப்பதான் அவங்க காலத்துக்கும் ஆளமுடியும் இதுதான் இடதுசாரி ஜனநாயகம்


தாமரை மலர்கிறது
மே 26, 2025 07:30

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு மானியத்தை நிறுத்துவது வரவேற்கத்தக்கது. இந்தியஅரசும் இதே மாதிரி செய்ய வேண்டும்.


மீனவ நண்பன்
மே 26, 2025 07:49

வாக்குவங்கியில் கைவைத்தால் சமூக நீதி என்று ஒரு செக்குலர் கும்பல் சண்டைக்கு வருமே


சமீபத்திய செய்தி