உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஓமனில் கால் பதித்த பிரதமர் மோடி; கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள்

ஓமனில் கால் பதித்த பிரதமர் மோடி; கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மஸ்கட்; அரசு முறை பயணமாக பிரதமர் மோடி, ஓமன் சென்றடைந்தார். ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். முதலில் ஜோர்டானுக்கும், அதன் பின்னர் எத்தியோப்பியாவுக்கு அவர் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.எத்தியோப்பியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஓமன் சென்றார். ஓமன் மன்னரும், பிரதமருமான சுல்தான் ஹைதம் பின் தாரிக் அழைப்பை ஏற்று, அவர் அங்கு சென்றுள்ளார். ஓமன் தலைநகர் மஸ்கட் சென்ற, பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது; ஓமன் நாட்டின் மஸ்கட்டில் தரையிறங்கினேன். இது இந்தியாவுடன் நீடித்த நட்பு மற்றும் ஆழமான வரலாற்று தொடர்புகளைக் கொண்ட நிலம். இந்த வருகையானது இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும், கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை சேர்க்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Gnana Subramani
டிச 18, 2025 06:39

ஓமனில் உயரிய விருது கொடுக்க வில்லையா


Iyer
டிச 17, 2025 21:53

உலக அளவில் ஒரு பாராளுமன்ற அமைத்து - எல்லா நாட்டு மக்களையும் வோட்டளிக்கவிட்டால் - மோடிதான் GLOBAL PRIME MINISTER ஆவார்.


G Mahalingam
டிச 17, 2025 21:52

இஸ்லாமியர்கள் நாடுகளில் மோடி ஆட்சியை வரவேற்பு செய்கிறார்கள். இஸ்லாமியர்கள் நாடுகளில் தான் விருது அதிகம் வருகிறது இந்தியா இஸ்லாமியர்களுக்கு மோடி அரசு துன்பம் விளைவித்தால் மற்ற இஸ்லாமிய நாடுகள் கண்டித்து இருக்கும். விருது கொடுக்க மாட்டார்கள். அப்போ காங்கிரஸ் திமுக சொல்வது இந்திய இஸ்லாமியர்களை பயம் காட்டுகிறார்களோ. ஆனால் வட இந்திய இஸ்லாமியர்கள் பாஜாகவுக்கு வோட்டு போடுகிறீர்கள்.


Ahamed
டிச 17, 2025 21:26

2026ரில் திமுக கெட் அவுட் பிஜேபி மாஸ் ஹிட்


முக்கிய வீடியோ