உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் பெயரை பயன்படுத்தி இலங்கையில் கைதி விடுதலை

அதிபர் பெயரை பயன்படுத்தி இலங்கையில் கைதி விடுதலை

கொழும்பு,: நம் அண்டை நாடான இலங்கையில் அநுர குமார திசநாயகே அதிபராக உள்ளார். இங்கு கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில், வெசாக் எனப்படும் புத்த ஜயந்தி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுதும் உள்ள சிறைகளில் இருந்து 388 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.அதில், அநுராதபுரம் சிறையில் இருந்து 40 லட்சம் ரூபாய் பணமோசடி வழக்கில் தண்டனை பெற்ற நபரை சிறைத் துறையினர் விடுவித்தனர்.அதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகிய போது, அவர் பெயர் மன்னிப்பு பெற்ற கைதிகள் பட்டியலில் இல்லை என்பது தெரிந்தது.இதையடுத்து அதிபரின் பொது மன்னிப்பை மோசடியாக பயன்படுத்தியதற்காக சிறைத்துறை தலைவர் துஷாரா மற்றும் அநுராதபுரம் சிறை கண்காணிப்பாளர் மோகன் கருணாரத்னே ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை