உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அன்று விமர்சனம், இன்று பாராட்டு: ஜெலன்ஸ்கி பேட்டியில் அரங்கேறிய ஒரு உடை சுவாரஸ்யம்

அன்று விமர்சனம், இன்று பாராட்டு: ஜெலன்ஸ்கி பேட்டியில் அரங்கேறிய ஒரு உடை சுவாரஸ்யம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உடை விவகாரத்தில் உக்ரைன் அதிபரை விமர்சித்த டிரம்ப் ஆதரவு நிருபரின் திடீர் பாராட்டு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.பொதுவாக உலக நாடுகளின் தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு என்பது சர்வதேச அரசியலில் அதிக கவனம் பெறும். குறிப்பாக அமெரிக்க அதிபருடன் யார் சந்திப்பு நிகழ்த்தினாலும் மேலைநாடுகளில் செய்தித்தாள், ஊடகங்களில் அதுதான் அதி முக்கிய செய்தி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jelyz10i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உக்ரைன் ரஷ்யா போர்ச்சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்த நிகழ்வும் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியது. அப்படி ஒரு சந்திப்பு இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழந்த போது, ஜெலன்ஸ்கியின் உடை விஷயம், டிரம்ப் ஆதரவு நிருபர் பிரைய்ன க்ளென்னாபொட் என்பவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதிபரை சந்திக்கும் போது இப்படித்தான் சூட் (suit) அணியாமல், வேறு ஆடை அணிவதா என்றும் நிருபர் கேள்வி எழுப்பி இருந்தார்.அப்போதைய நிருபர்களின் சந்திப்பின் போது உடன் இருந்த டிரம்பும் இதையே தான் நானும் அவரிடம்(ஜெலன்ஸ்கி) சொன்னேன் என்று கூற இந்த சம்பவம் மேலைநாட்டு ஊடகங்களில் பேசு பொருளாக மாறியது.இந் நிலையில், டிரம்புடன் நேற்றைய சந்திப்புக்கு பின்னர், ஜெலன்ஸ்கி மீண்டும் நிருபர்களை சந்தித்தார். அப்போது பிரைய்ன் க்ளென்னாபொட் என்ற நிருபர் (இவர் தான் ஜெலன்ஸ்கியின் ஆடையை விமர்சித்தவர்) முதலில் நீங்கள்(ஜெலன்ஸ்கி) அற்புதமாக தெரிகிறீர்கள். இன்று அணிந்திருக்கும் கருப்பு நிற சட்டை,மேல் கோட் ஆடையில் அற்புதமாக காணப்படுகிறீர்கள் என்று பாராட்டினார். பின்னர் பிப்ரவரி மாதம் நிகழ்ந்த சந்திப்பில் தாம் விமர்சித்ததற்கு தமது வருத்தத்தையும் பதிவு செய்தார்,அதை ஏற்றுக் கொண்ட ஜெலன்ஸ்கி நீங்களும் அதே உடையில் இருக்கிறீர்கள் என்று பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர், ரஷ்யாவுடன் போர் உடன்படிக்கை ஏற்பட்ட பின்னர், நான் தேர்தல்களை நடத்த உள்ளேன். பாதுகாப்பான சூழலில் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
ஆக 19, 2025 18:50

ஊடகங்கள், ராகுல் இப்படி டீ ஷர்ட் அணிந்து, பாராளுமன்றம் வருவதை பற்றி கேள்வி கேட்க பயப்படுகிறார்கள்.தொழில் தர்மம் கடைபிடிக்க வேண்டும்


KavikumarRam
ஆக 19, 2025 10:15

இந்திய எதிர்க்கட்சி துரோகிகள் இந்த அமெரிக்கர்களையும் ரஷ்யர்களையும் சைனாக்காரனையும் பார்த்து படிங்க. அவனுங்க நாட்டுக்கு என்ன வேணுமோ அதை தெளிவா எப்படி நாடகம் ஆடியும் கூட சாதிச்சுக்கிறானுங்க. நம்ம நாட்டுல தான் காசுக்கு எதிர்கட்சிக்காரனுங்க இவ்வளவு கேவலமா நடந்துக்கிறானுங்க.


Ambedkumar
ஆக 19, 2025 10:11

நம்ம ஊரிலும் டீ ஷர்ட்டுடன் ஒருவர் பிரதமரை சந்தித்தது நினைவிருக்கிறதா? இங்குள்ள நிருபரகள் அவரை விமர்சித்ததாக ஞாபகம் இல்லை


S.V.Srinivasan
ஆக 19, 2025 13:03

கேட்டா,... கூட போவேன் என்று விதண்டாவாதம் செய்யும் கோஷ்டி அது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை