வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அது உண்மைதான். அமெரிக்காவில் IT தொழில் செய்யும் நமது இந்திய நிறுவனங்களான TCS, WIPRO, மற்றும் பல நிறுவனங்கள், அமெரிக்கர்களுக்கு, அதிகமான ஊதியம் கொடுப்பதை தடுத்து லாபங்களை அதிகரிக்க, அங்கு பணிபுரியும், அமெரிக்கர்களை வேலையை விட்டு நீக்கிவிட்டு அல்லது குறைந்த சம்பளத்தில் வேறு ஒரு கிளைக்கோ, ஊருக்கோ மாற்றப்படுகிறார்கள். அவர்களின் இடங்களில், H-1B விசா மூலம் வரும் வெளிநாட்டவரை அமர்த்துகிறார்கள். இது, நமது நாட்டு நிறுவனங்கள் அங்கே சென்ற நாள் முதல் நடந்து வருகிறது. நம்மவர்கள் சொல்லும் காரணம் என்றவென்றால், எங்களுக்கு, இங்கே தகுதியுள்ள மென்பொருள் engineer அல்லது STEM எனப்படும், Science, Technology, Engineering, Mathematics வல்லுநர்கள் அமெரிக்காவில் கிடைக்கவில்லை என்பதே. ஆரம்பத்தில், அதாவது கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இந்த நிலை இருந்தது. ஆனால், அது படிப்படியாக மாறிவருகிறது. அவ்வாறு நமது நிறுவனங்கள் அங்கு செய்த இந்த காரியங்களை, அமெரிக்கா அரசு பத்து ஆண்டுகளுக்கு முன்பே, கண்டறிந்து அதற்கான சட்ட நடவடிக்கைகளும் எடுத்தன. வேலை இழந்த அமெரிக்கர்களும், குறைந்த சம்பளம் கொடுப்பதற்காக, வெளிநாட்டு ஆட்களை கொண்டுவந்து, எங்களை பணியிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்று அங்கே நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்தார்கள். அதற்காக, நீதிமன்ற உத்தரவின்படி, நமது நிறுவனங்கள் மிகப் பெரிய தொகையை அபராதமாக செலுத்தவேண்டி வந்தது சரித்திரம். எனவே டிரம்ப் அவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு, அமெரிக்க மக்களின் அமோக ஆதரவு உள்ளது. அங்குள்ள நிறுவனங்கள் தான் இவற்றை சரி செய்து சமாளிக்க வேண்டிவரும். தற்சமயம் 3.50 லட்சம் இந்தியர்கள் அங்கே H-1B விசாவில் பணிபுரிகின்றனர். இதனால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படப்போவது, நமது இந்திய பணியாட்கள் தான். ஆனால் இது நாட்டிற்கு ஒரு blessing in disguise - வேறு உருவத்தில் வந்த ஆசீர்வாதம் என்றே கூறவேண்டும். நமது மத்திய அமைச்சர்களும், மென்பொருள் நிறுவன தலைவர்களும் அங்குள்ள நமது அனுபவமிக்க பணியாளர்களை வரவேற்க தயாராக உள்ளதாக அறிக்கை விட்டுள்ளார்கள். எனவே அங்கு அமெரிக்காவில் கிடைத்த சம்பளங்களை விட குறைவாகவே இங்கே, இந்தியாவில் கிடைத்தாலும், வேலையாவது கிடைக்கிறதே என்ற நிம்மதியில் அவர்கள் இருப்பார்கள். அவர்களது அனுபவம் நமது நாட்டிலுள்ள நிறுவனங்களுக்கு அனுகூலம். எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
பேசாமல் ஹச் 1 பி பயனாளர்கள் அனைவருக்குமான சம்பள விநியோகத்தை இந்நிறுவனமே முன்னின்று செய்யலாம். ஹச் 1 பி பயனாளர்கள் சம்பளத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் வாங்கி கணக்கில் வரவு வைத்துவிட வேண்டும். அடுத்தநாள் சம்பந்தப்பட்ட ஊழியரின் கணக்கில் இந்நிறுவனமே அவர்களின் சம்பளத்தை வரவு வைக்கும். இப்படிச் செல்லுவதால் வெரி எந்த வழியிலும் ஹச் 1 பி ஊழியர்கள் சம்பாதிக்க முடியாத நிலை ஏற்படும். எத்தனை ஹச் 1 பி பயனாளர்கள் ஊழியர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எங்கெங்கு வேலை செய்கிறார்கள், அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் போன்ற அனைத்து விபரங்களும் இந்நிறுவனத்திடம் கண்காணிப்பில் இருக்கும். மொத்தத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் அடிமைகள் நிர்வாகத்துறை. எப்படி ஐடியா. இனி இந்தியர்கள் இங்கு வராதீர்கள், உங்கள் நாட்டை முன்னேற்றும் வழியை பாருங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். எல்லாம் நன்மைக்கே.
புராஜெக்ட் பயர்வால் திட்டத்திற்க்கே இந்திய வம்சாவளியினர் தேவைப்படுவார்கள் ..
தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் போல அமெரிக்காவும் மண்ணின் மைந்தர்களுக்கு பாராடுக்கள். மோடியின் வசுதைவ குடும்பகம் உலக அளவில் பிசுபிசுக்கிறது. மக்கள் மனம் குறுகிக் கொண்டே போகிறது.
பெயர் விடுவதில் மன்னர்...