உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சொந்த மக்களை கொன்றவர்: பாக்., ராணுவ தளபதிக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

சொந்த மக்களை கொன்றவர்: பாக்., ராணுவ தளபதிக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு எதிராக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கோஷம் போட்டனர். 'சொந்தநாட்டு மக்களை கொன்றவர், படுகொலை செய்தவர் என கோஷம் போட்டனர்.பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருப்பவர் அசிம் முனீர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆத்திரத்தை தூண்டும் வகையில் பேசினார். இவர் ஆத்திரமூட்டும் வகையில் பேசி வருகிறார்.அவர், அமெரிக்கா உடனான ராணுவம் மற்றும் பிராந்திய உறவை மேம்படுத்த வாஷிங்டன் சென்றுள்ளார். ஐந்து நாட்கள் தங்கி உள்ளார்.இதனையறிந்த பாகிஸ்தானியர்கள் பலர், அவர் தங்கியிருந்த ஓட்டல்முன்பு ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.'ஆசிம் முனீர் , நீங்கள் கோழை', ' படுகொலை செய்தவர், வெட்கப்பட வேண்டும்,''சர்வாதிகாரி, 'பாகிஸ்தானியர்களை கொன்றவர்' என கோஷம் போட்டனர். அந்த வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது போலீசார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மேலும், ' துப்பாக்கி பேசும் போது, ஜனநாயகம் இறக்கிறது,', ஆசிம் கொலைகாரர்' என்ற வாசகங்களை ஒளிரச் செய்யும் வாகனங்களை கொண்டு வந்தனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kalyanaraman
ஜூன் 18, 2025 08:45

பாகிஸ்தான், சைனாவைப்போல் டபுள் கேம் ஆடும் அமெரிக்காவும் நமக்கு எதிரிதான்.


N Srinivasan
ஜூன் 18, 2025 08:32

இவனை கூப்பிட்டு வச்சு உட்கார வச்சு சாப்பாடு போட்டு பேசுகிறார் டிரம்ப். யாரை நம்புவது இந்த உலகத்தில்


Kasimani Baskaran
ஜூன் 18, 2025 04:12

தீவிரவாதிகளுடனும் கூட சுமுகமான உறவு என்ற அமெரிக்க கோட்பாடு பல்லிளித்து பல காலம் ஆகிவிட்டது.


ashok kumar R
ஜூன் 17, 2025 22:01

அமெரிக்கா இந்தியாவை வெறுப்பேத்த இப்பிடி செய் கிரது


Barakat Ali
ஜூன் 18, 2025 09:26

எந்த லாஜிக்கில் இப்படிச் சொல்றீங்க ????


Ramesh Sargam
ஜூன் 17, 2025 21:36

அமெரிக்கா எதற்காக அப்படிப்பட்ட ஒரு கொலைகாரனை தன் நாட்டுக்குள் வர அனுமதித்தது. எல்லாம் தெரிந்த ஞானி டிரம்புக்கு பாக்கிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முநீர் ஒரு கொலைகாரன் என்று தெரியாதா?


venkat eswaran
ஜூன் 17, 2025 21:57

அப்பாவியா நீங்கள் .. இல்லை நடிக்கிறீர்களா .. எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமே அமெரிக்கா தான்


Karthik
ஜூன் 17, 2025 22:34

மறைமுகமாக பாகிஸ்தானுக்கு கடனுதவி செய்து தீவிரவாதிகளையும் பயங்ரவாதத்தையும் வளர்ப்பதாகவும், பாக்.இடமுள்ள அணு ஆயுதங்கள் அனைத்துமே அமெரிக்காவின் உடையது தான் என்ற ஒரு பேச்சும் உள்ளது. அதன்படி பார்த்தால் கையிருப்பு ஆயுதங்களும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்திய ஆயுதங்களையும் கணக்கு காட்டி மேலும் பல ஆயுதங்களையும் சப்ளை செய்ய வேண்டி கேட்க சென்றிருப்பாaf இந்த அமெரிக்க நாட்டாமையின் அடிமை, அல்லக்கை அடியாள் முனீர்.


சமீபத்திய செய்தி