உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இருந்தா கனடா போல இருக்கணும்; ஹிந்துக்களுக்கு ஆதரவாக கிறிஸ்தவ, யூத, புத்த மதத்தினர்

இருந்தா கனடா போல இருக்கணும்; ஹிந்துக்களுக்கு ஆதரவாக கிறிஸ்தவ, யூத, புத்த மதத்தினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோரன்டோ: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி கனடாவில் நடந்த போராட்டத்தில் ஹிந்து, யூதர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர் இணைந்து பங்கேற்றனர். கடந்த வாரத்தில் வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். மாணவர்கள் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. ஹிந்துக்கள் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றன. ஹிந்துக்கள் குறி வைத்து தாக்கப்படுவதாக சமூக வலை தளங்களில் போலியான தகவலும் பரப்பி விடப்படுகிறது. வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களாக வாழும் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என பல உலகில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று (ஆக-12) கனடாவில் டவுண்டவுண் டோரோன்டோவில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஹிந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் இணைந்து பங்கேற்றனர். வீ வாண்ட் ஜஸ்டிஸ் என கோஷங்கள் எழுப்பினர். மேலும் வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களை காப்பாற்ற அந்நாட்டு இடைக்கால அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் கனடா அரசு உயர் அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது.

ஐ.நா முன்பு போராட்டம்

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகம் முன்பு ஹிந்துக்களுக்கு ஆதரவாக 'ஹிந்து ஆக்சன்' அமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sankaranarayanan
ஆக 13, 2024 20:17

இந்தியாவில் எதிர்கட்சிகள் ஓரிடத்தாலாவது இந்துக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்யவே இல்லையே


kumar kumar
ஆக 13, 2024 17:56

அன்பை விதைத்தால் அன்பை பெறுவீர்கள் நாம் இங்கு எதை விதைக்கிறோமோ அதை தான் உலகம் எங்கும் அறுப்போம் ஒரே நாடு ஒரே மதம் என்று இந்தியாவில் மத நல்லிணக்கத்தை கெடுப்போரை ஆதரிப்பவர்கள் அங்கு சென்று இந்துக்களை காப்பாற்றுங்கள் என்று கோஷம் இடுகின்றார்கள்


Aswath Narayanan
ஆக 13, 2024 19:57

சரியாக சொன்னீர்கள் ஐயா, இந்த முறையாவது இந்து பண்டிகைக்கு நம் முதல்வர் வாழ்த்து வாரா என பார்ப்போம்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 13, 2024 17:54

மதமெனப்பிரிந்தது போதும் ன்னு சொல்லுற மார்க்கத்தினர் இந்த கூட்டத்துல இல்லீங்களே ....


SUBBU,MADURAI
ஆக 13, 2024 19:20

தர்மராஜ் உமக்கு குசும்பு ஜாஸ்திய்யா!?


என்றும் இந்தியன்
ஆக 13, 2024 17:43

அந்த இமேஜை நன்றாக பாருங்கள் பங்களாதேஷ் ஹிந்துக்களை காப்பாற்றுங்கள் என்று எழுதியிருக்கின்றது???


என்றும் இந்தியன்
ஆக 13, 2024 17:41

ஆனால் அங்கிருக்கும் காலிஸ்தான் சீக்கியர்கள் இந்துக்களுக்கு எதிரி ??????


Srinivasan Krishnamoorthi
ஆக 13, 2024 15:59

ஆக அங்கு ஆட்சி நடத்துவதில் சூத்ரதாரிகளான சீக்கியர்கள் வங்கதேச இந்துக்களுக்கு குரல் கொடுக்க வரவில்லை


sridhar
ஆக 13, 2024 15:49

எங்கெங்கோ இருக்கும் கிறிஸ்துவ புத்த மதத்தவர்க்கு கூட ஹிந்து மதம் மேல் பரிவு இருக்கு, இங்கே உள்ள தமிழ் மற்றும் கேரள ஹிந்துக்களுக்கு இஸ்லாம் மேல் மட்டும் தான் பாசம் இருக்கு.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 13, 2024 15:38

அதே கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. அந்த சமயத்தில் எந்த கிறிஸ்துவ யூத புத்த மதத்தினரும் ஆதரவாக இருந்ததாக தெரியவில்லை.


என்றும் இந்தியன்
ஆக 13, 2024 17:48

ஆகவே இதன் உண்மையான அர்த்தம் கனடாவில் நடந்தால் முன்னேயும் பின்னேயும் மூடிக்கொள்வார்கள் எங்கோ தொலைவில் நடந்தால் அதற்கு கொடி தூக்குவார்கள்.உன் உடல் அழுக்கை முதலில் நீக்கு பிறகு இன்னொருவரின் உடல் அழகை பார்த்து குறை கூறலாம் கனடா வாழ்மக்களே


S.Martin Manoj
ஆக 13, 2024 15:26

நல்ல வேளை அங்கு பிஜேபி இல்லை,


R.Subramanian
ஆக 13, 2024 16:59

நல்லவேளை அங்கே ஜார்ஜ் பொன்னையா ஆ ராஜா திருமா போன்றவர்கள் இல்லை என்று சொல்வது சரியாக இருக்கும்


Rajarajan
ஆக 13, 2024 15:05

நன்றி தெரிவிக்கிறோம். இப்போது புரிகிறதா, பல காங்கிரஸ், திராவிட அல்லக்கைகள், முஸ்லீம் நாடுகளுக்கு எதிராக, இந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில்லை என்று. எல்லாம் சுதந்திர கால நிகழ்வுகளுக்கே வெளிச்சம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை