உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தவறாக வழிநடத்தப்படுகிறார் புடின் ; அமெரிக்க அதிபர் டிரம்ப்

தவறாக வழிநடத்தப்படுகிறார் புடின் ; அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தி ஹேக்: நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.'நேட்டோ' எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த, 30 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ராணுவ ஒத்துழைப்புக்கான இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவை பகிரங்கமாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது; உக்ரைன் மீதான போருக்குப் பிறகு, பிற நாடுகளையும் ஆக்கிரமிக்க ரஷ்ய அதிபர் புடின் நினைப்பது போல் தெரிகிறது. 'நேட்டோ' அமைப்பின் மிகப்பெரிய நீண்டகால அச்சுறுத்தல்களில் ஒன்றாக ரஷ்யா இருக்கிறது. உக்ரைனுக்கு கூடுதல் ஆயுத உதவிகளை வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். புடின் தவறாக வழிநடத்தப்படுகிறார் என உணர்கிறேன். உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடின் முன் வர வேண்டும். இந்தப் போரை நிறுத்த இது சரியான நேரம். நான் புடினுடன் பேசி முடிவு காண்பேன். இது எதிர்பார்த்ததை விட சிக்கலானதாக உள்ளது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M Ramachandran
ஜூன் 26, 2025 20:53

உம்மைபோல் புடின் லொட லொடன்னு தம்பட்டம் அடிச்சிக்கிட்டு அதிகம் பேச மாட்டார். ஆனால் செயலில் இருக்கும்.


தஞ்சை மன்னர்
ஜூன் 26, 2025 17:00

இஸ்ரேல் என்ற பேடி நட்டால் நீங்கள் தவற வழிநடத்த படுகிறீர்கள் என்பது மட்டும் உண்மை


சமீபத்திய செய்தி