உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மேக் இன் இந்தியா திட்டம்; இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு !

மேக் இன் இந்தியா திட்டம்; இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு !

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தை ரஷ்ய அதிபர் புடின் பாராட்டியுள்ளார்.மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில், புடின் பேசியதாவது: இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. எங்கள் உற்பத்தித்தளத்தை இந்தியாவில் நிறுவ தயாராக உள்ளோம். இந்திய பிரதமரும், இந்திய அரசும், நிலையான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர்.இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று நாங்கள் நம்புகிறோம். ரஷ்யாவில் விவசாயம் உட்பட அனைத்து துறைகளிலும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புகளை விரிவு படுத்துவதற்கான தேவை உள்ளது.கடந்த ஆண்டு நாங்கள் 66 பில்லியன் டாலர் அளவுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்தோம். பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா திட்டம்' பாராட்டக் கூடியது. இவ்வாறு அவர் பேசினார். பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Raj S
டிச 05, 2024 21:39

எரியுதடி மாலை fana போடு... நம்ம செயல்படாத திராவிட மாடல் தலைவர் சொல்றமாதிரி ஹா ஹா ஹா


HARI KRISHNAN .M
டிச 05, 2024 17:06

Right comments


பேசும் தமிழன்
டிச 05, 2024 12:50

இந்திய நாட்டில் இருப்பது போல்....அமெரிக்கா நாட்டிலும் காபந்து அரசு எந்த கொள்கை முடிவும் எடுக்கும் அதிகாரம் இல்லை என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.. காபந்து அரசு என்பது புதிய அரசு அமைக்கும் வரை ...மக்களின் அன்றாட தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் அரசாக இருக்க வேண்டும்......அதை விடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவி ஏற்கும் முன்பு .....போகிற போக்கில் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட கூடாது.


அசோகன்
டிச 05, 2024 12:08

இந்தியா இப்போதுதான் மோடிஜியால் வளர்ந்து வருகிறது.. ஏற்றுமதி வெறும் 800 கோடியாக 2013னில் இருந்தது அது இப்போது 87000 கோடியாக உயர்ந்துள்ளது. வந்தேபாரத் விமானம் தாங்கி கப்பல் மற்றும் போர் விமானங்கள் என அசத்தலாக இந்தியா சொந்தமாக தயாரிகிறது... இது உண்மையான இந்தியன் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது...மோடிஜி வாழும் நேதாஜி ??????


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 05, 2024 11:48

ஏற்கனவே ஓரிரு முறை பாராட்டியுள்ளார் .......


SUBBU,MADURAI
டிச 05, 2024 10:52

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டதால் இப்போது அதிபராக இருக்கும் பைடன் இன்னும் சில நாட்களில் பதவி முடிந்து மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு வெள்ளை மாளிகையை விட்டு போகப் போகிறார். அப்படி போவதற்கு முன் குள்ளநரியான அவர் Deep State என்றழைக்கப்படும் (சட்டப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பின்னால் நிழலாக இருந்து கொண்டு அந்த அரசாங்கத்தை இயக்கும் George Soros போன்ற மிகப்பெரிய தொழிலதிபர்கள், அரசாங்க கொள்கையில் செல்வாக்கு செலுத்தி சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் அரசு அதிகாரிகள், சி.ஐ.ஏ ரகசிய உளவாளிகள்,ஆயுத மாஃபியாக்கள், சோஷியல் மீடியாவின் ஏஜென்டுகள், இடதுசாரிசிந்தனையாளர்கள், இன்னும் பலர்..) போன்றவர்களுடன் சேர்ந்து கொண்டு தந்திரமாக பல சதி வேலைகளை செய்து வருகிறார். அதில் பங்ளாதேஷில் கலவரத்தை தூண்டுவது, இந்தியாவிலும் அவரது கைக் கூலிகளை வைத்து பாராளுமன்றத்தை முடக்குவது, விவசாயிகள் என்ற போர்வையில் காலிஸ்தான் ஆதரவாளர்களை தூண்டி விட்டு குழப்பம் விளைவித்து கலவரத்தை உண்டாக்குவது, தான் பதவியை விட்டு இறங்கு முன் குற்றவாளியான தன் மகனை விடுவித்தது போன்ற பல கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக.உக்ரைனுக்கு ஒருசில நாட்களுக்கு முன் ரஷ்யாவை எதிர்த்து போரிட ஏழெட்டு மாதங்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கியது மட்டுமல்லாமல் மேலும் ரஷ்யாவின் உள்ளே இருக்கும் நகரங்களை குறிவைத்து தாக்கும் பல ஏவுகனைகளையும் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனின் அதிபர் கோமாளி ஜெலன்ஸ்கியை அதிபராக ஆக்கியதே அமெரிக்காதான். தன் எதிரியான ரஷ்யாவை எதிர்க்க அதன் அருகில் உள்ள நாடுகளை முயற்சி செய்தும் எந்த நாடும் ரஷ்யாவிற்கு எதிராக செயல்பட முன்வரவில்லை. அப்போது வசமாக சிக்கியவர்தான் இந்த ஜெலன்ஸ்கி. இந்த கோமாளி அவர்களுக்கு தோதாக அமைய கோழியை அமுக்குவது போல் அமுக்கி அவரை உக்ரைனுக்கு அதிபராக்கி விட்டனர். இப்போது அவர்கள் திட்டப்படி அவரை வைத்து ரஷ்யாவை எதிர்த்து போரை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இப்படி அமெரிக்காவால் திணிக்கப்பட்ட இந்த போரை பெரும்பாலான உக்ரேனிய மக்கள் விரும்பவில்லை. அதே போல் ரஷ்யாவை எதிர்த்து போரிட 70 சதவீத உக்ரேனிய ராணுவ வீரர்களும் விரும்பவில்லை.ஜெலன்ஸ்கியின் வற்புறுத்தலால் வேறு வழியில்லாமல் அவர்கள் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறார்கள். ஆரம்பத்தில் எவ்வித புரிதலும் இன்றி ஆக்ரோஷத்துடன் சண்டையிட்ட உக்ரைன் வீரர்களுக்கு போகப் போகத்தான் உண்மை புரிய ஆரம்பித்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவர்கள் எதிரியாக கருதும் ரஷ்யா என்ற நம் பக்கத்து நாட்டை நாம் எதற்கு எதிர்க்க வேண்டும்?மூன்று வருடங்களாக நடக்கும் இந்த போரால் நமக்கு என்ன நன்மை என்ற எண்ணம் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது. இந்த போரை தூண்டிவிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகள் அவர்கள் நாட்டில் நிம்மதியாக இருந்து கொண்டு நம்மிடம் ஆயுதங்களை கொடுத்து ஏன் நமது நாட்டை போரிட தூண்டுகிறார்கள் மேலும் நம் எல்லையில் உள்ள நமது மொழி பேசும் ரஷ்யாவை எதிர்பதற்கு எங்கோ இருக்கும் நேட்டோ படைகளை நமது நாட்டில் அனுமதித்து ரஷ்யாவை ஏன் பகைக்க வேண்டும் என சிந்திக்க தொடங்கி விட்டார்கள். அதன் விளைவாகத்தான் ஒரு லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனிய வீரர்கள் ராணுவத்தை விட்டு வெளியேறி விட்டனர். மேலும் பல ஆயிரக் கணக்கான உக்ரைன் நாட்டு ஆண்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பயந்து கொண்டு ஜெர்மனியில் தனியாக வாழ்கின்றனர். ஐரோப்பா உட்பட உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் மரண பயத்தை காட்டிய ஜெர்மனி கடைசியில் ரஷ்யாவிடம் மண்ணைக் கவ்வியது வரலாறு. அதேபோல ரஷ்ய அதிபர் புடினுக்கு உக்ரைனை சுடுகாடு ஆக்குவதற்கு ஒரு நாள் போதும். அமெரிக்காவின் Patriot, இஸ்ரேலின் Iron Dome உட்பட எந்த நாட்டு பாதுகாப்பு சாதனங்களாலும் தடுக்கவே முடியாத IRBM ரக ஏவுகனைகளை கொண்டு (Oreshnik hypersonic cruise missile) உக்ரைன் நாட்டை நொறுக்கி போட முடியும். ஆனால் அவர் இந்த ஜெலன்ஸ்கி என்ற ஒரு கோமாளிக்காக உக்ரைன் மக்களை அழிக்க விரும்பவில்லை. இதை எல்லாம் விட கொடுமை என்னவென்றால் ஜெர்மன் நாட்டில் உள்ள விபச்சார விடுதிகள் உக்ரேனிய பெண்களால் நிரம்பி வழிகிறது என்று ஜெர்மனிய ஊடகமான WELT ெரிவித்திருப்பதுதான் மிகவும் வேதனையளிக்கும் விஷயம். எனவே அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதும் இந்தப் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால் அது அந்த இரண்டு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் சில நாடுகளை தவிர மற்ற உலக நாடுகள் அனைத்துக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கும்.


Srinivasan Krishnamoorthy
டிச 05, 2024 12:36

excellent comment


Nava
டிச 05, 2024 12:57

மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 05, 2024 14:35

எடுத்துக்கொண்ட நேரம், முயற்சிக்கு நன்றியும் பாராட்டுதல்களும் ......


HARI KRISHNAN .M
டிச 05, 2024 17:07

ரைட் comment