உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் மோதல் குறித்து டிரம்ப்புடன் பேச புடின் தயார்

உக்ரைன் மோதல் குறித்து டிரம்ப்புடன் பேச புடின் தயார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: உக்ரைன் மோதல் விவகாரம் குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தயாராக உள்ளதாக கிரெம்ளின் மாளிகை கூறியுள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். அவர் துவக்கம் முதலே, ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதலுக்கு முடிவு கட்டுவேன் எனக் கூறி வந்தார்.நேற்று டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், புடின் என்னை சந்திக்க விரும்புகிறார். இதனை அவர் பொது வெளியிலும் கூறி வந்துள்ளார். அதற்கு ஏற்பாடு தயாராகி வருகிறது எனக் கூறியிருந்தார்.இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அதிகாரிகள் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பதற்கு புடின் எப்போதும் தயாராக உள்ளார். டிரம்ப் உள்ளிட்ட எந்த சர்வதேச தலைவரையும் சந்திக்க தயாராக இருப்பதாக அவர் ஏற்கனவே கூறியுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படுத்தப்படும் டிரம்ப்பின் முடிவு வரவேற்கத்தக்கது. இந்த சந்திப்புக்கு என எந்த நிபந்தனையும் இல்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்க்க பரஸ்பர விருப்பமும் அரசியல் விருப்பமும் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Easwar Kamal
ஜன 10, 2025 20:30

பேசறதுக்கு என்ன இருக்கு. ஆப்கான் எப்படி தீவிரவாதி கூட்டத்துக்கு தூக்கி கொடுத்த மாதிரி , அப்படியே உக்ரைன் தூக்கி rusia விடம் கொடுக்க போறீங்க. அதைதான் புடின் விரும்புவார்.


Laddoo
ஜன 10, 2025 21:26

உங்கள் கருத்து தவறானது. உக்ரைன் சோவியத்திலிருந்து பிரிந்த போது அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. நேட்டோ படைகள் அங்கு வரக் கூடாது மற்றும் நிலை நிறுத்துக் கூடாது. அதை மீறி ஸிலின்ஸ்கி நடந்து கொண்டபின் ரஸ்சியா அதை எதிர்த்தது. போர் மூண்டது. தற்சமயம் உக்ரைன் பொருளாதாரம் படுபாதாளத்துக்கும் கீழே இறங்கி விட்டது. செழிப்பாக இருந்த நாட்டை ஸிலின்ஸ்கி/ நேட்டோ படைகள்/மற்றும் பிடென் கூட்டு சேர்ந்து படு நாசமாக்கி விட்டன. டிரம்ப் மற்றும் மோடி இப்போரை முதலிலிருந்தே எதிர்த்து வந்தனர்.


சமீபத்திய செய்தி