உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அலெக்சி நாவல்னி மரணத்திற்கு புடினே பொறுப்பு : ஜோபைடன்

அலெக்சி நாவல்னி மரணத்திற்கு புடினே பொறுப்பு : ஜோபைடன்

வாஷிங்டன்: ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி மரணத்திற்கு அதிபர் புடினே முழு பொறுப்பு என அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.ரஷ்யாவில் அதிபராக ஐக்கிய ரஷ்யா கட்சியை சேர்ந்த விளாடிமிர் புடின் உள்ளார். இங்கு, 'எதிர்கால ரஷ்யா' என்ற கட்சியை நடத்தி வந்த அலெக்சி நாவல்னி,48 அதிபர் புடினுக்கு எதிராக ஊழல் புகார்களை தொடர்ச்சியாக சுமத்தி விமர்சித்து வந்தார்.இதையடுத்து அலெக்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய ரஷ்ய அரசு, 2021ல் அவரை ஆர்க்டிக் சிறையில் அடைத்தது..நேற்று சிறையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அந்நாட்டு சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் இவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.நாவல்னி மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசியது: விளாடிமிர் புடினின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நாவல்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்து வருகிறது. இதற்கு புடின் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு ஜோபைடன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Indian
பிப் 17, 2024 16:52

ஆமா புதின் தான் கொன்றார் என்று நிரூபணமானால் ரஷ்யா மேலே படை எடுப்பீங்களா அவ்வளளவு தைரியம் இருக்கா உங்களுக்கு ? சிறிய நாட்டை தான் உங்களால் பயமுறுத்த முடியம் மற்ற நாடுகளிடம் உங்கள் பாட்சா பலிக்காது


Jawaharlu Naidu
பிப் 17, 2024 13:32

சவூதி அரேபிய பதித்திரிகையாளர் ஜமால் கஷோகி, கொலையில் தாங்கள் என்ன செய்தீர்கள் அமெரிக்கா அதிபரே ?


பேசும் தமிழன்
பிப் 17, 2024 08:34

சரி அப்படியே இருக்கட்டும்.... அப்போ அமெரிக்காவில் இறந்தவர்களுக்கு யார் பொறுப்பு ????


RAJ
பிப் 17, 2024 08:24

பெர்முடா ..விலும் அல்லக்கையா???


Palanisamy Sekar
பிப் 17, 2024 02:15

ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் ஜெர்மனியில் சிகிச்சை எடுத்துவந்தவருக்கு மீண்டும் அதே மாதிரி மயங்கி விழுந்து இறந்துபோனார்..இதில் புடின் முழுப்பொறுப்பை ஏற்க வேண்டுமென்றால் அவரென்ன நாவலனிக்கு உறவா அல்லது அவருக்கான மருத்துவரா?


Senthoora
பிப் 17, 2024 06:16

அவர் புடினின் உளவு படையால் நஞ்சு ஊட்டப்பட்டவர். சரித்திரம் அறிந்து கருத்து சொல்லணும் சார். அவர் புட்டினின் எதிரி, முறையாக தேர்தல் ரஷியாவில் நடந்தது இருந்தால் அவர்தான் இன்றைய ரஷிய தலைவர்.


Ramesh Sargam
பிப் 17, 2024 01:06

தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் போல இவரும் ஒரு மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார். International Dirty Politics.


vaiko
பிப் 17, 2024 01:02

அதே போல நேருவின் மரணத்திற்கு மோடி பொறுப்பு ஏற்க வேண்டும்.


பேசும் தமிழன்
பிப் 17, 2024 08:35

பப்பு கம்பெனி அப்படி சொன்னாலும் சொல்லும்.... அதற்க்கு நாம் விடியாத ஆட்கள் ஒத்து ஊதுவார்கள் !!!!


மேலும் செய்திகள்