உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 2022ல் டிரம்ப் பதவியில் இருந்திருந்தால் போர் நடந்திருக்காது: சொல்கிறார் புடின்

2022ல் டிரம்ப் பதவியில் இருந்திருந்தால் போர் நடந்திருக்காது: சொல்கிறார் புடின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''2022ம் ஆண்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்திருந்தால் உக்ரைன் உடனான போர் நடந்திருக்காது'' என முன்னாள் அதிபர் ஜோ பைடனை ரஷ்ய அதிபர் புடின் கடுமையாக சாடியுள்ளார்.அலாஸ்காவில் உக்ரைன் விவகாரம் குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடினும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நிருபர்களிடம் புடின் கூறியதாவது: இன்று அதிபர் டிரம்ப் கூறும் போது, அப்போது நான் அதிபராக இருந்திருந்தால் போர் நடந்திருக்காது, அது உண்மையிலேயே அப்படித்தான் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

உறவுகள் மேம்படும்

2022ம் ஆண்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்தால் உக்ரைன் உடனான போர் நடந்திருக்காது. அமெரிக்கா-ரஷ்யா உறவுகள் மேம்படும். நமது நாடுகள் எவ்வாறு பொதுவான எதிரிகளை எதிர்த்து போராடின என்பதை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். இந்த பாரம்பரியம் எதிர்காலத்தில் நமக்கு உதவும். உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் டிரம்ப் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் ஒரு தீர்வை எட்டுவதற்கு முன்பு, மோதலுக்கான அனைத்து காரணங்களும் அகற்றப்பட வேண்டும்.

2ம் கட்ட பேச்சுவார்த்தை

பரஸ்பர புரிதல் உக்ரைனுக்கு அமைதியை கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். உக்ரைனில் உள்ள மோதலைத் தீர்ப்பதற்கும், ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை மீட்டெடுப்பதற்கும் டிரம்ப் உடனான பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் ஒரு தொடக்கமாக அமையும். 2ம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். அடுத்த சந்திப்பு மாஸ்கோவில் நடை பெறும். உக்ரைன் விவகாரத்தில் விரைவில் முடிவு எட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Oviya Vijay
ஆக 16, 2025 17:31

தாயின் கருவறையை விட்டு இந்த ஒரு மனிதர் மட்டும் ஒருவேளை இவ்வுலகிற்கு வராமல் இருந்திருந்தால், இருதரப்பிலும் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்காது... இந்த ஒற்றை மனிதனின் ஆணவத்தினாலும் சர்வாதிகாரப் போக்கினாலும் உலகில் அமைதி கேள்விக்குறியாகியிருக்கிறது... இரு நாட்டு அப்பாவி ராணுவ வீரர்களுக்கும் குடும்பங்கள் குழந்தைகள் என்று அனைத்து பாசப் பிணைப்புகளும் உண்டு என்பதை ஏன் இவ்வாறான மோசமான மனிதர்கள் உணர மறுக்கிறார்கள் என்றே தெரியவில்லை... உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்கள் போரினால் சின்னாபின்னமாகி போயிக் கிடைக்கின்றன... அவர்களின் எதிர்காலம்??? வட கொரியா நாட்டிலும் இதே நிலை... சர்வாதிகாரத் தலைமையினால் சொந்த நாட்டிலேயே மக்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்... சிரிக்கக் கூடாது... கொண்டாட்டம் கூடாது... வெளியுலகினரோடு தொடர்பு கூடாது... எத்தனை எத்தனை கட்டுப்பாடுகள்... இவர்களைப் போன்ற சர்வாதிகாரிகளின் மரணங்கள் மக்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும்... அது நிகழட்டும் வெகு விரைவில்... ஆவலுடன்...


ஆரூர் ரங்
ஆக 16, 2025 15:13

போர்வெறி பிடித்த புடினுடன் பேசிப் பயனில்லை. உலகப்போராக ஆக்கி விட்டுத்தான் மறுவேலை.


ரங்ஸ்
ஆக 16, 2025 11:00

ஏரியா பிரிப்பதில் உடன்பாடு எட்டவில்லை. யூரபியன் யூனியன் நேட்டோவில் சேரக்கூடாது, க்ரீமியா, இயற்கை எரி வாயு சப்ளை, கோதுமை வளம், கனிம வளம், யார் யாருக்கு ? மக்கள் பாவம்.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 16, 2025 09:13

சர்வாதிகாரிகளுக்கு ட்ரம்ப், மோடி, புடினும் தான் தலையில் ஐஸ் வைத்தால தான் பிடிக்கும். இது ரஷ்யாவின் கேஜிபி தலைவராக இருந்த புடினுக்கு இது நன்றாகவே தெரியும். தலைகீழ் பாடம்.


Anand
ஆக 16, 2025 10:38

புரிகிறது, நமக்கு பிடித்த ஒசாமா, ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி, மசூர் அசார், ஹபீத் சயீத், சையத் சலாலுதீன் மற்றும் ஏனைய மூர்க்க அமைதி விரும்பிகள் பெயர்கள் இடம்பெறவில்லையே என்கிற உன்னோட ஆதங்கம் புரிகிறது..


புதிய வீடியோ