உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விரைவில் புடின் மரணமடைவார்: கணித்து சொல்கிறார் உக்ரைன் அதிபர்

விரைவில் புடின் மரணமடைவார்: கணித்து சொல்கிறார் உக்ரைன் அதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: ரஷ்ய அதிபர் புடின் விரைவில் மரணமடைவார் என்றும், அதன் பிறகு போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.ரஷ்யா - உக்ரைன் இடையில் நீண்ட காலமாக போர் நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி இரு நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aucbr8fj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது: தற்போது உலகளவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள ரஷ்யாவிற்கு அமெரிக்கா உதவப் போவது கிடையாது. இது பெரிய ஆபத்தானது என நான் நினைக்கிறேன். புடின் மரணமடையும் வரை ரஷ்ய அதிபராக தொடர்வார். உக்ரைனுடன் அவரது நோக்கம் நின்று விடாது. மேற்கத்திய நாடுகளுடன் நேரடியாக மோதும் வரை அவரது நோக்கம் இருக்கும்.அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஒற்றுமையாக இருந்து புடினுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். ஐரோப்பா- அமெரிக்கா கூட்டணியை பார்த்து புடின் பயப்படுகிறார். அதனை பிரிக்கலாம் என நினைக்கிறார். விரைவில் அவர் மரணமடைவார். அத்துடன் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வரும். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ராமகிருஷ்ணன்
மார் 27, 2025 22:28

ஜெலன்ஸ்கி 1000 வருடம் இருக்க போகிறார்ரா. அவனவனுக்கு வயிற்றெரிச்சல் உளறல் இது.


சிட்டுக்குருவி
மார் 27, 2025 20:41

ஒருவேளை ரஷியன் அதிபர் புடின் இந்திய மண்ணை மிதித்து சென்ற பிறகு நல்லெண்ணங்கள் தோன்றி போரை இவரே முழுமையாக நிறுத்தி உக்கிரைநோடு தொடர்பு ஏற்படுத்தி நல்ல உறவோடு உலகளவில் மக்கள் இன்புற்று வாழ நம் இறைவன் அருள்புரிய வெண்டுவோமாக " யாதும் ஊரே யாவரும் கேளீர்"


Appa V
மார் 27, 2025 21:24

நம் இறைவன் ? உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் கர்த்தர் தான் இறைவன் ..பாலைவனத்துக்கு ஒரு பரம்பொருள் ..இந்தியாவில் கணக்கற்ற கடவுள்கள் ...உங்களை இன்னமும் லேகியமாக்காமல் விட்டுவைத்திருக்கும் கடவுள் யார் ?


Pandi Muni
மார் 27, 2025 20:31

அவரே தான். ஒரு நாடே குட்டிச்சுவரா போகுதுன்னா திராவிடரால மட்டும்தான் அது சாத்தியம்


Bhakt
மார் 27, 2025 20:21

உக்ரைனில் ஒரு பப்பு.


பேசும் தமிழன்
மார் 27, 2025 19:36

அதற்கு முன்னால் நீங்க போய் சேர்ந்து விடுவீங்க.... அப்போதே.... தேவையில்லாத இந்த போர் முடிவுக்கு வந்து விடும்.


மணியன்
மார் 27, 2025 19:16

விரக்தியின் உச்சகட்ட உளறல்.நினைக்கும் கேடு தனக்கும்


Perumal Pillai
மார் 27, 2025 18:55

உக்ரைன் நாட்டு திராவிடர் ஆக இருப்பாரோ ?


Anand
மார் 27, 2025 18:36

இந்த சர்க்கஸ் கோமாளியை அதிபர் ஆக்கினால் இப்படித்தான் பேசுவார். இவரால் உக்ரைன் சிதறுண்டு போவது உறுதி... அது சரி மனிதன் உட்பட எல்லா உயிரினங்களும் என்றாவது ஒருநாள் மரணம் அடையும், ஆனால் உங்களுக்கு மட்டும் மரணம் இல்லை என்பது போலல்லவா பேசுறீங்க...


Nandakumar Naidu.
மார் 27, 2025 18:33

இவர் இவருடைய மரணத்தைப்ற்றி யோசிக்க வேண்டும்.


Oru Indiyan
மார் 27, 2025 18:14

போரில் புடின் மரணம் நிகழ்ந்தால் மூன்றாவது உலக போர் ஆரம்பிக்கும்