உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜெலன்ஸ்கியை புடின் சந்திக்க மாட்டார்: போர் நிறுத்தத்திற்கு முயற்சித்த டிரம்ப் வெளிப்படை!

ஜெலன்ஸ்கியை புடின் சந்திக்க மாட்டார்: போர் நிறுத்தத்திற்கு முயற்சித்த டிரம்ப் வெளிப்படை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்ய அதிபர் புடின் சந்திக்க மாட்டார். ஏனெனில் அவருக்கு அவரை பிடிக்கவில்லை'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். அவர் ரஷ்ய அதிபர் புடினிடம் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் உக்ரைன் அதிபர் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்து பேசினார். இதில் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், புடின் ஏன் ஜெலன்ஸ்கியை சந்திக்க இவ்வளவு தயங்குகிறார்? என்று டிரம்ப் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு டிரம்ப் அளித்த பதில்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்ய அதிபர் புடின் சந்திக்க மாட்டோர். ஏனெனில் அவருக்கு அவரை பிடிக்கவில்லை. இரண்டு போர்க்கால தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் சந்திக்கலாம்.ரஷ்ய அதிபர் புடின்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும். அடுத்த ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துவிட்டு அதில் தலையிடுவேன். நான் எப்போதும் சொல்வேன். நான் ஒரு சந்திப்பை நடத்தி ஒப்பந்தத்தை முடிப்பதற்கு முன்பு அவர்கள் சந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SP
ஆக 26, 2025 13:50

உக்ரைன் அதிபர் இனிமேலாவது அமெரிக்காவை நம்புவதை விட்டுவிட்டு ரஷ்யாவை நம்பி இறங்கி வந்தால் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு உண்டு.


Sekar
ஆக 26, 2025 11:42

புடின் ஒப்பு கொண்டாலும் இவர்கள் ஜெலன்ஸ்கி சந்திப்புக்கு அனுமதிக்க மாட்டார்கள். உண்மையில் ஜெலன்ஸ்கிக்கு உக்ரேன் முக்கியம் என்றால் அவர் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்தமின்றி புடினுடன் நேரில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.


Anand
ஆக 26, 2025 11:03

விஜயகாந்த் நடித்த "நானே ராஜா நானே மந்திரி" படம் இவனுக்கு பொருந்தும்.


P T Sridharan
ஆக 26, 2025 09:58

authorised signatory.....Fit person....power of attorney holder.... இதில் எதிலுமே டிரம்ப்....ஒட்டக்கூடிய சாத்தியமில்லை.... நேர்மையான இந்தியா அமைதிக்கான தகுந்த முயற்சிகளை முன்னெடுக்கும்....வெற்றி பெரும். If not ....NATO.....Ukraine will get berhed in ...BRICS..... if India and China can coexist....why not Russia and Ukraine....time will testify it. jaihind


Subburamu K
ஆக 26, 2025 09:42

All wars between different countries are sponsored by Trump, USA. They are number one economy by selling their weapons. They are doing lucrative business in weapons sales. Number one terrorists in the world is Trump and Number one country is USA


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை