உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தேர்தல் கமிஷன் பணிந்து விட்டது அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

தேர்தல் கமிஷன் பணிந்து விட்டது அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாஸ்டன்: ''மத்தியில் ஆளும் கட்சிக்கு, தேர்தல் கமிஷன் பணிந்து விட்டது. இதனால் தேர்தல் முடிவுகளில் அது சமரசம் செய்துள்ளது,'' என, அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பாஸ்டன் நகரில் நடந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:தேர்தல் கமிஷன் சமரசம் செய்துள்ளது. அதன் செயல்பாடுகளில் சில தவறுகள் தென்படுகின்றன. மஹாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அப்போது, மாலை 5:30 மணிக்கு ஓட்டுப் பதிவு சதவீதம் குறித்த ஒரு தகவலை தேர்தல் கமிஷன் அளித்தது. ஆனால், இரண்டு மணி நேரத்தில், அந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.அதாவது, இரண்டு மணி நேரத்தில், 65 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளனர். இதற்கு சாத்தியமே இல்லை. இதில் இருந்து தேர்தல் கமிஷன், மத்திய அரசுக்கு பணிந்து, சமரசம் செய்துள்ளது தெளிவாக தெரிகிறது. இந்தியா, அமெரிக்கா இடையேயான நட்புறவு வலுவாக இருக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு முன்பும், மஹாராஷ்டிரா தேர்தல் ஓட்டு சதவீதம் குறித்து ராகுல் பல முறை புகார் கூறியுள்ளார். இதற்கு தேர்தல் கமிஷனும் விளக்கம் கொடுத்துள்ளது. 'எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை' என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.'ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், தேர்தல் முகவர்கள் முன்னிலையில்தான் ஓட்டுப் பதிவு நடக்கிறது. அதுபோல, அவர்கள் முன்னிலையில்தான் ஓட்டுகளும் எண்ணப்படுகின்றன. ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் எந்த முறைகேடும் செய்ய முடியாது' என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.ஓட்டு எண்ணிக்கை முடிந்து, அனைத்து தகவல்களும் முழுமையாக பெறப்பட்டு, தொகுக்கப்பட்டு அளித்ததால்தான், ஓட்டு சதவீதம் குறித்த இடைவெளி இருந்ததாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனாலும், ராகுல் தொடர்ந்து குற்றஞ்சாட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், வழக்கம் போல் வெளிநாட்டிற்கு சென்று, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 'கடந்த லோக்சபா தேர்தலில், 100 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு ராகுல் என்ன காரணம் கூறப்போகிறார்?' என்றும், பா.ஜ., தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பா.ஜ., விமர்சனம்

ராகுலின் பேச்சு குறித்து, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:நம் நாடு குறித்தும், அமைப்புகள் குறித்தும் இழிவுபடுத்தும் வகையில் வெளிநாடுகளில் பேசுவதை ராகுல் தொடர்ந்து செய்து வருகிறார். இது நாட்டுக்கு செய்யும் துரோகமாகும். மஹாராஷ்டிரா தேர்தலில் அடைந்த தோல்வி, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மோசடியில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். தவறு செய்துள்ளதால், சுதந்திரமாக செயல்படும் விசாரணை அமைப்புகளின் விசாரணைகளில் இருந்து அவர் தப்பிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Rasheel
ஏப் 23, 2025 12:37

வெளி நாட்டு குடியுரிமை உள்ளவன் அப்படி நாட்டை காட்டி கொடுத்து பேசுவது தானே நியாயம் ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 22, 2025 11:26

இப்படி அங்கே போய் இளவரசர் பேசுவதால் பாஜவுக்குத் தொடர்ந்து உதவுகிறார். பாஜக பதிலுக்கு நன்றி கூடச் சொல்வதில்லை.. என்ன ஒரு நெஞ்சழுத்தம் ??


ஆரூர் ரங்
ஏப் 22, 2025 10:57

இரண்டாண்டுகள் ஜெயில் தண்டனை பெற்ற ஜாமீன் கைதியை அங்கு அழைத்தது யார்? அவர்களும் கிரிமினல் பின்னணி உள்ளவர்களா?


பிரேம்ஜி
ஏப் 22, 2025 07:58

இடம் பொருள் ஏவல் தெரியாமல் உளறும் இவர் சிறுவனா? வளர்ந்த மனிதரா? என்று சந்தேகம் வருகிறது! மேதை நேருவுக்கு இப்படி ஒரு கொள்ளுப்பேரன்! இதில் இந்தியப் பிரதமராக ஆசை! ஒரு உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்! உளரத் தெரிந்து ஊர் சுற்றத் தெரிந்தால் போதும்! ஆட்சி நிர்வாகம் தெரிய வேண்டாம்! யாரும் முதல்வராகலாம்! பிரதமர் ஆகலாம்!


Srinivasan Krishnamoorthy
ஏப் 22, 2025 09:02

first of Nehru was not a great he did not any great service to the nation comparable to the current prime minister..like Dravidian parties why give build up for undeserving


Ragupathy
ஏப் 22, 2025 07:54

நேஷனல் ஹெரால்டு வழக்கு பற்றி ஊடகங்களில் கண்டு கொள்வதில்லை. நம் இதழில் அதுபற்றி விரிவான கட்டுரை வந்தால் நல்லது...மற்றபடி ராகுல் பேசியது தண்டனைக்குரியது..


Dharmavaan
ஏப் 22, 2025 07:39

இப்படி நம் உள்ளூர் விஷயங்களை வேலை நாட்டில் பேசும் இவரை ஏன் தண்டிக்கக்கூடாது


பேசும் தமிழன்
ஏப் 22, 2025 07:39

மக்கள் இவரையும்... இவர் சார்ந்துள்ள இண்டி கூட்டணி ஆட்களையும் தேர்தலில் விரட்டி விரட்டி அடித்தாலும்.. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுகிறார்.. இந்திய நாட்டின் உப்பை சாப்பிட்டு விட்டு.. வெளிநாட்டில் போய் வாந்தி எடுக்கிறார்.. இவரது குடியுரிமையை பறித்து.... நாடு கடத்த வேண்டும்.


Oviya Vijay
ஏப் 22, 2025 07:16

பப்பு இப்படி பேசினால்தான், கேரள மன மாறிகளின் வாக்கு மொத்தமாக கிடைக்கிறது...தேர்தல் நேரமல்லவா...???


vivek
ஏப் 22, 2025 07:50

திராவிட முட்டு கேரளாவில்?


வாய்மையே வெல்லும்
ஏப் 22, 2025 07:12

உச்ச நீதிமன்றம் ராவுளின் செயலை பார்த்து கள்ளமவுனம் காப்பது அவரிடம் பேசி பைசல் பண்ணிவிட்டார்கள் என எடுத்துக் கொள்ளலாமா? ராவுல் செய்வது ராஜதுரோகம் என்பது வெட்ட வெளிச்சம்


Iyer
ஏப் 22, 2025 07:08

பிரதமர் பதவி தன் குடும்பத்திற்கே என்று நினைப்பதும் - சிறுதும் நாணம் இன்றி ஊழல் செய்வோம் யாரும் கேட்கமுடியாது என்று நினைப்பதும் - இனி முடியாது - ஐயா. 4 தலைமுறைகளாக இந்த நாட்டை கொள்ளை அடித்து முன்னேறவிடாமல் தடுத்த உங்கள் குடும்பம் இனி சிறையில் தான் கழிக்கும்.


புதிய வீடியோ