உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போராடத் தயார்: டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பிற்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு

போராடத் தயார்: டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பிற்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த இறக்குமதி வரி குறித்து, உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விகித்தை அறிவித்தார். இதில் 15 நாடுகளுக்கு எவ்வளவு சதவீத வரி என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளார். இது குறித்து உலக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

கனடா பிரதமர் மார்க் கார்னி

அதிபர் டிரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக போராடுவோம். எக்கு, அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல்களுக்கான இறக்குமதி வரி, கோடிக்கணக்கான கனடா மக்களை நேரடியாக பாதிக்கும். இந்த வரி விதிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்

வர்த்தகப் போரை எதிர்த்து போராட தயாராகி விட்டோம். நாங்கள் எதையும் சமாளிப்போம்.ஸ்பெயின் பிரதமர், பெட்ரோ சான்செஸ்எங்கள் நாடு தொழிலாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தும். தொழிலாளர்களை பாதுகாக்கும். உலகத்திற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.சுவீடன் பிரதமர், உல்ப் கிறிஸ்டர்சன் நாங்கள் ஒரு வர்த்தகப் போரை விரும்பவில்லை. அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். எங்கள் நாடுகளில் உள்ள மக்கள் சிறந்த வாழ்க்கையை வாழ விரும்புகிறோம்.ஐரிஷ் வர்த்தக அமைச்சர், சைமன் ஹாரிஸ்அயர்லாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக இரு்கிறோம். பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் எப்போதும் முன்னோக்கி சிறந்த வழி.இத்தாலி பிரதமர் மெலோனிவரத்தக போரை தவிர்க்க வேண்டும். அதிபர் டிரம்புடன் இணைந்து பணியாற்றுவோம். அமெரிக்காவுடன் இணைந்து எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் வர்த்தகப் போரைத் தவிர்க்க விரும்புகிறோம்.ஆஸ்திரேலியா பிரதமர் ஆன்டனி அல்பனீஸ்இது ஒரு நண்பரின் செயல் அல்ல. தனது நாடு பதில் வரி விதித்து பழிவாங்காது. ஆஸ்திரேலியா அமெரிக்க பொருட்கள் இறக்குமதிகளுக்கு எந்த வரியும் வசூலிக்கவில்லை. இந்த வரிகள் எதிர்பாராதவை அல்ல. ஆனால் நான் தெளிவாகச் சொல்கிறேன். அவை முற்றிலும் தேவையற்றவை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா ஆஸ்திரேலியாவின் வலிமையான இராணுவ நட்பு நாடாக இருந்து வருகிறது. எங்கள் அரசாங்கம் எப்போதும் ஆஸ்திரேலிய மக்களுக்கு ஆதரவாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

naranam
ஏப் 03, 2025 13:58

அது எப்படி எல்லா நாடுகளுமே தாங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதாகவே சொல்கிறார்கள்? அப்படி என்ன வாங்கிக் குவிக்கிறார்கள் அமெரிக்கா மக்கள்? கிட்டத் தட்ட எல்லா நாடுகளுமே அமெரிக்கா வரி விதிப்பால் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்றனர். அமெரிக்க வரி விதிக்காது என்ற நம்பிக்கையில் தான் இவர்கள் பொருளாதாரம் இருக்கிறதா? கிட்டத்தட்ட 6 பில்லியன் மக்கள் 350 மில்லியன் மக்களை நம்பி இருப்பது போலத் தெரிகிறது! இந்தியாவில் தயாரிக்கப் படும் பொருட்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக இருந்தால் மற்ற நாடுகளைப் நம்பி இருப்பது குறைய வாய்ப்பு உண்டு.


RAVINDRAN.G
ஏப் 03, 2025 10:01

இந்தியாவில் இடஒதுக்கீடு இருக்கிறது. ஆகவே நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெற்று இருந்தாலும் இடஒதுக்கீடு இருப்பதால் அவர்களின் திறமைக்கு எங்கு மதிப்பு உள்ளதோ அங்கே செல்கிறார்கள். திறமைக்கு மதிப்பு கொடுக்கும் நாடு நிச்சயம் முன்னேறும். இந்தியாவில் இடஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யும் சரியான நேரம் இதுவே. இல்லையென்றால் இங்கு அரைவேக்காடு திறமையை வைத்துக்கொண்டு முன்னேறுவது கடினம்.


ஆரூர் ரங்
ஏப் 03, 2025 09:32

விலைவாசி உயர்வுக்கு வித்திட்டு சொந்த மக்களுக்கே வேட்டு வைக்கிறார் டிரம்ப். இயன்றளவு அன்னியப் பொருட்களை தவிர்த்து உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிக்க இந்தியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.


Rangarajan Cv
ஏப் 03, 2025 09:50

100% correct. Huge imbalance of foreign trade is with china. Stop imports as much as possible from them. Otherwise we will have rapid depletion of fx reserves and the resultant impact on economy. Protect or destroy - will be our actions.


Sundar Pas
ஏப் 03, 2025 09:24

படித்த திறமையான புத்திசாலிகளை அமெரிக்காவுக்கு அனுப்புவதை வளரும் நாடுகள் தடை செய்யவேண்டும். நமக்கு அமெரிக்க வேலையாட்கள் தேவையில்லை அதேபோல நமது வேலையாட்கள் அமெரிக்காவுக்கு தேவையில்லை.


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஏப் 03, 2025 09:16

நம்ம மோடிஜி மைண்ட் வாய்ஸ் "என் உழைப்பு எல்லாம் வீணா போச்சே! இப்ப நான் என்னா சொல்றது."


Gnana Subramani
ஏப் 03, 2025 08:35

உலகத்துக்கே குரு என்ன சொல்லுவார்


Narayanan Muthu
ஏப் 03, 2025 11:04

பதுங்கு குழியில் பதுங்கி இருப்பார்


sankaranarayanan
ஏப் 03, 2025 08:32

உலக வர்த்தக வரி என்ற அடைமொழியை டிரம்புக்கு கொடுத்துவிடலாம்


அப்பாவி
ஏப் 03, 2025 08:05

இதுநாள் வரை அமெரிக்காவின் ஏற்றுமதிகளும், டெக்னாலஜி முன்னேற்றங்களும் அமெரிக்காவை மேலே வைத்திருந்தன. இப்போ அமெரிக்காவுக்கு உற்பத்தியை சீனாவும், மென்பொருளை இந்தியாவும் ஏற்றுமதி செய்து அங்கே உள்ளூர்க் காரங்களுக்கே பிழைப்பில் மண் விழுந்து விட்டது. இதுக்குமேலே அமெரிக்ஜ ஏற்றுமதிக்கு அதிக வரி விதித்து குளிர் காய்ந்த நாடுகளுக்கு இப்போது ஷாக். அமெரிக்கா உற்பத்தியிலும், சாஃப்ட்வேரிலும், வேலை வாய்ப்பிலும் தன்னிறைவு பெற வேண்டுமென்று ட்ரம்ப் நினைப்பதில் தவறில்லை. அதை தவறுன்னு உலகநாட்டு தலைவர்கள் நினைப்பதுதான் தவறு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை