உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க தயார்: ஹமாஸ் அறிவிப்பு

பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க தயார்: ஹமாஸ் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ''காசா போரை முடிவுக்கு கொண்டு வர மீதமுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க தயார்'' என ஹமாஸ் தெரிவித்துள்ளது.பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால் இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜன., 19 முதல் 42 நாட்களுக்கு முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமல் செய்யப்பட்டது.அப்போது, இரு தரப்பிலும் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டின. காசா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் அவ்வப்போது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.இந்நிலையில், ''காசா போரை முடிவுக்கு கொண்டு வர மீதமுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க தயார்'' என ஹமாஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் கலீல் அல் ஹயா கூறியதாவது: அரசியல் காரணங்களுக்காக தற்காலிக போர் நிறுத்தங்களை இஸ்ரேல் கையில் எடுக்கிறது. இதற்கு இனி ஹமாஸ் ஒப்புக்கொள்ளாது. போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் மட்டுமே மீதமுள்ள பிணைக்கைதிகள் 59 பேரை விடுவிப்போம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் ஹமாசுக்கு எதிராக காசாவின் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பேசும் தமிழன்
ஏப் 18, 2025 16:25

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்....இஸ்ரேல் நாட்டுக்காரன் போட்டு தாக்குவதால் ....இந்த மனமாற்றம் இப்போது வந்து இருக்கிறது.....மயிலே மயிலே என்றால் இறகு போடாது .


JaiRam
ஏப் 18, 2025 14:33

கடைசி மூர்க்கணை கொள்ளும் வரை மாவீரன் நெதனியாகு தாக்குதலை நிறுத்தக்கூடாது


sankaranarayanan
ஏப் 18, 2025 12:51

ஏன் இந்த காரியத்தை முன்பே செய்திருந்தால் எவ்வளவு உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் என்ன செய்வது இப்போதாவது நல்ல புத்தி வந்ததே


Natarajan Ramanathan
ஏப் 18, 2025 12:29

இஸ்ரேல் முழுமையாக ஹமாஸை ஒழிக்கும்வரை போர் நிறுத்தத்துக்கு ஓத்துக்கொள்ள கூடாது.


Mohamed Younus
ஏப் 18, 2025 11:27

உலகில் அமைதி நிலவ விரும்பமாட்டார்கள்


Kumar Kumzi
ஏப் 18, 2025 12:13

ஹாஹாஹா உலக அமைதியின்மைக்கு முழு காரணமே ...


Keshavan.J
ஏப் 18, 2025 11:09

உயிரோடவா அல்லது பிணமாகவே.


Karthik
ஏப் 18, 2025 10:51

பத்தோட 11 அத்தோட அவனும் ஒன்னு அப்படிங்கற மாதிரி மிச்சம் மீதி இருக்குற தலைகளையும் போட்டு தள்ளுங்க நெதன் யாகூ..


சத்ய நாராயணன்
ஏப் 18, 2025 10:46

அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்பது உண்மைதான் போலும்


Subbu
ஏப் 18, 2025 12:52

உண்மை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை