உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சட்டவிரோதமாக அகதிகள் தங்கி உள்ளனரா: இந்திய உணவகங்களில் பிரிட்டன் போலீசார் சோதனை

சட்டவிரோதமாக அகதிகள் தங்கி உள்ளனரா: இந்திய உணவகங்களில் பிரிட்டன் போலீசார் சோதனை

லண்டன்: சட்டவிரோதமாக அகதிகள் யாரும் தங்கி உள்ளனரா என்பது குறித்து கண்டறிய, இந்தியர்கள் நடத்தும் உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிரிட்டன் போலீசார் சோதனை நடத்தினர்.பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி உள்ள அகதிகளை கண்டறியும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அப்படி சிக்கியவர்களை கைது செய்து சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mhwana5n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்படி உள்ளே வருபவர்களை தடுப்பதற்காக பிரிட்டன் அரசு புது சட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளது. இந்த அகதிகளால் எல்லை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறியுள்ள அரசு, அவர்களை எல்லையிலேயே தடுத்து மொபைல்போனை பறிமுதல் செய்து கைது செய்யும் வகையில் பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க இந்த சட்டத்தில் வழிவகை செய்துள்ளது.கேர் ஸ்டார்மர் தலைமையில் புதிய அரசு பதவியேற்றதும் பிரிட்டனில் இருந்து அடைக்கலம் தர முடியாது என மறுத்தவர்கள் மற்றும் வெளிநாட்டு கிரிமினல்கள், குற்றவாளிகள் என 19 ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் எனக் கூறியுள்ளது.இந்நிலையில், அடுத்த கட்டமாக, சட்டவிரோதமாக குடியேறிய அகதிகள் குறித்து, இந்திய உணவகங்கள், கபேக்கள், வணிக வளாகங்கள், வாகனம் தூய்மை செய்யும் இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்குள்ள இந்தியர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. ஹம்பர்சைட் பகுதியில் உள்ள இந்திய உணவகத்தில் நடந்த சோதனையில் ஏழு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பாக உள்துறை செயலாளர் யுவெட்டே கூப்பர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஜனவரி மாதம் 828 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது அதில் 609 பேர் கைது செய்யப்பட்டனர். உணவகங்கள், கபேக்கள், புகையிலை தொழிற்சாலை உள்ள இடங்களில்தான் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்களின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல், இந்தாண்டு ஜன.,இறுதி வரை சட்டவிரோதமாக குடியறேியவர்களுக்கு எதிரான சோதனைகள் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக 1,090 நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. பொய் சொன்னது கண்டறியப்பட்டால், இங்கிலாந்து பண மதிப்பில் 60 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
பிப் 11, 2025 17:26

இதேபோல் இந்தியாவில் செய்வதற்கு மத்திய பாஜக அரசுக்கு தைரியம் இல்லை என்பது தான் உண்மை.அதை மறைப்பதற்கு பாஜகவினர் எதிர்க்கட்சிகளின் மீது வீண்பழி சுமத்துகின்றனர் .


வாய்மையே வெல்லும்
பிப் 11, 2025 18:19

முட்டை மார்க்கு வாங்கினாலும் எகதாளத்துக்கு குறைச்சல் இல்ல ... ராவுலுங்காட்டியும் இந்நேரம் ஆட்சியில் இருந்தால் என்றைக்கோ பங்களாதேஷ் ஐ விட பரிதாப நிலைக்கு போயிருக்கும் என்பது புரிந்தும் புரியாதமாதிரி பேச்சு .


Vijay D Ratnam
பிப் 11, 2025 16:55

பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் புகுந்து இருக்கும் சட்டவிரோத குடியேறிகளை அப்புறப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. அது போல தங்கள் மதத்துக்காக ஒரு நாடு வேண்டும் என்று போராடி இரண்டு தோளோடு கைகளை வெட்டியெடுப்பது போல பாகிஸ்தான் இடது வலது என்று கேட்டுப்பெற்றும் செல்லாமல் இங்கு இருப்பவர்களில் விருப்பம் உள்ளவர்களை அவர்களின் சொர்க்கமான பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளுக்கு இந்திய அரசே கூட அனுப்பி வைக்கலாம்.


Ramalingam Shanmugam
பிப் 11, 2025 15:18

இங்கே ஈப்போ முதலில் பப்பு


Raa
பிப் 11, 2025 13:12

எல்லா நாடுகளும் பண்ணுகிறது. இந்தியா பண்ணினால் மட்டும் இங்கிருக்கும் அந்நிய அடிவருடிகள் குய்யோ முய்யோ என்று கத்துவது. Need CAA.


M Ramachandran
பிப் 11, 2025 12:37

தங்கியிருந்தாலும் ஒரு ... இயலாது. இப்போ ஆட்சியில் உள்ள கட்சியெ அந்த மதத்தினர் கையில்


KRISHNAN R
பிப் 11, 2025 11:10

அங்க பன்னா என்ன இல்லேன்னா என்ன. இங்கே எப்போ


Ray
பிப் 11, 2025 11:02

WHATEVER YOU DO GOOD OR BAD, WILL BE MULTIPLIED AND RETURNED BACK TO YOU. THAT'S SIMPLY KARMA. - GITA


Narayanan Muthu
பிப் 11, 2025 10:47

இந்திய குடியுரிமை பெற வெளிநாட்டினர் வரிசையில் காத்துக்கிடப்பர் என கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசில் வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் அவல நிலை பரிதாபத்திற்குரியதாக உள்ளது.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
பிப் 11, 2025 11:44

அதை அவங்க பார்த்துப்பாங்க, அது திருப்பூர் இல்ல


enkeyem
பிப் 11, 2025 13:15

வெளிநாடு வாழ் இந்தியர்கள் முறையான அனுமதியுடன் தங்கியுள்ளவர்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை. கள்ளதனமாக அங்கு குடியேறியவர்கள் தான் வெளியேற்றப்படுகிறார்கள். விரைவில் பாரதத்திலும் அது நடக்கும். அப்போது பொங்கு


PR Makudeswaran
பிப் 11, 2025 14:52

சட்டத்திற்கும் நியாயத்திற்கும் விரோதமாக குடியேறினால் சும்மா இருக்க வேண்டும் என்று தங்கள் சொல்வது போல் தோன்றுகிறது.


Kumar Kumzi
பிப் 11, 2025 15:59

ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்ட மொதல்ல திருப்பூர்ல பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி மூர்க்கனுங்கள ஓட்டு பிச்சைக்காரன் ஓங்கோல் துண்டுசீட்டு விடியாத விடியலை விரட்ட சொல்லு


Laddoo
பிப் 11, 2025 16:12

முதல்ல ஒங்கொலிருந்து உள்ளே புகுந்தது, பின்னர் திருட்டு ரயிலேறி தமிழர்களை ஏமாற்றி சுரண்டி கொழுத்து வாழ்வது. இதெல்லாம் அங்கே நடக்காது மிஸ்டர். நஸிர்


சமீபத்திய செய்தி