உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்.,- ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது: சொல்கிறார் அதிபர் டிரம்ப்!

பாக்.,- ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது: சொல்கிறார் அதிபர் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் மோதலை தீர்ப்பது எளிது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமைதிக்கான நோபல் பரிசுக்காக போர்களை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் பல முறை கூறி வந்தார். அப்படியிருந்தும் அவருக்கு இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை. வெனிசுலா நாட்டை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகும், போர் நிறுத்திய கதைகளை டிரம்ப் நிறுத்துவதாக இல்லை. இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட 7 போரை நிறுத்திவிட்டேன் என கூறி வந்த டிரம்ப், காசாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், 8 போரை நிறுத்திவிட்டேன் என தம்பட்டம் அடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, அவர் ஒரு பக்கம், ஒன்பதாவதாக உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் கூறிவருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u5wcvrcl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது அவரது கவனம் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் மோதல் பக்கம் திரும்பி இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இந்த மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல் குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தற்போது ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது.அவர்களுக்கு இடையிலான பிரச்னையை தீர்ப்பது எனக்கு எளிது. இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட எட்டு உலகளாவிய போர்களை தீர்த்துவிட்டேன். நான் ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்னையைத் தீர்க்கும்போது, ​​அடுத்ததைத் தீர்த்தால், உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று அவர்கள் சொன்னார்கள். எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. யாரோ ஒருவர் அதைப் பெற்றார். மிகவும் நல்ல பெண். ஆனால் எனக்கு அது கவலையில்லை. எனக்கு உயிர்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

sankaranarayanan
அக் 18, 2025 21:24

பாக்.,- ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது: சொல்கிறார் அதிபர் டிரம்ப் ஆமாம் சூனியம் முதலில் வைத்தவரே நீதானய்யா உலகமே அறியும் நீ பாகிஸ்தானை புகழுவதும் அவர்கள் உனக்கு நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்வதும் என்னய்யா டிராமா பகல் வேஷமா இது உலகமே அறியும் உன்னடைய அரசியல் பித்தலாட்டம்


SUBBU,MADURAI
அக் 18, 2025 19:16

ஆமா ...ஆரம்பித்து வைத்தவர்கள் தானே முடித்து வைக்க வேண்டும்!


R.MURALIKRISHNAN
அக் 18, 2025 19:08

இப்படியே சொல்லி சொல்லி வயசாகி எல்லா பல்லும் விழுந்த பிறகு உங்களுக்கு நோ பல் பரிசு குடுப்பாங்க வாங்கிட்டு போங்க


Modisha
அக் 18, 2025 19:06

எங்கே சண்டை நடக்கும்னு காத்துக்கிட்டு இருக்கார் , வந்து மூக்கை நுழைக்க . கிறுக்கன் .


Nagarajan D
அக் 18, 2025 18:30

இவர் ஒருத்தர்... இவரை கொஞ்சம் நிறுத்த சொல்லுங்கப்பா


D.Ambujavalli
அக் 18, 2025 18:23

சும்மா இருங்கப்பா அடுத்தது காரியாபட்டியில், கோழிச்சண்டையில் இரண்டு குழுவும் அடிச்சுக்கிறாங்க. போய் ‘சமாதானம்’ பண்ணி, அடுத்த நோபலுக்கு துண்டு போடணும்.


duruvasar
அக் 18, 2025 18:02

ஒரு போரை ஆரம்பித்துவைத்தவன் தான் முடிக்க வைக்க முடியும். ஆகவே பாகிஸ்தானின் சிண்டு அமெரிக்கா கையில் இருப்பதால் அவர் சொல்வது போல் முடியலாம் . அண்ணல் உக்ரைன் போரை ஆரம்பித்த அமெரிக்காவால் முடிக்க வழி தெரியவில்லை. தங்களப்பித்து ஆயுத வியாபாரதிர்காக அந்த போரை முடிக்க விடமாட்டார்கள். இதுதான் நிதர்சனம் .


பா மாதவன்
அக் 18, 2025 17:17

இவரோட தினமும் அக்கப்போர் ஆக உள்ளது. பொழுது விடிந்து பொழுது போனா , தினமும் உளறல் தான். 8 போரை நிறுத்திவிட்டேன் என தம்பட்டம் அடித்து வரும் டிரம்ப் அப்படியே நம்ப ஊர் பக்கம் வந்தா, எங்களது பக்கத்து வீட்டினருக்கும், எதிர் வீட்டினருக்கும் நடக்கும் தினசரி சண்டை _ போரை நிறுத்தினால் , உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர முடியாவிட்டாலும், பரவாயில்லை - இந்த போரை ஒன்பதாவதாக அறிவித்து கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடிக்கலாம். நெதர்லாந்து "நோபல்" பரிசு கொடுக்காவிட்டாலும், எங்கள் ஊரில் "நோ" பல் பரிசு கொடுப்பார்கள். வாங்கி செல்லுங்கள் அன்பரே.


Indhuindian
அக் 18, 2025 14:39

கட்ட பஞ்சாயத்து மன்னன் எதுவுமே உருப்படலே எல்லாமே புட்டுக்கிச்சு இந்த அஷகுக்கு இவருக்கு நோபல் பரிசு வேணுமாம் நாச்சியப்பன் பாத்திரக்கடையிலே காசு குடுத்தாக்கூட குடுக்கமாட்டாங்க


Manon
அக் 18, 2025 14:34

Main business is manufacturing Arms and Ammunition and their sale by creating disharmony between countries those who are living peacefully. Then claim Nobel prize for resolving the dispute. If U.S. reduces the mfg of such items, peace will prevail automatically.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை