கோல்டுமேன் சாச் ஆலோசகர் ஆனார் ரிஷி சுனக்
நியூயார்க்:பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், சர்வதேச முதலீட்டு வங்கி நிறுவனமான கோல்டுமேன் சாச் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2001 முதல் 2004 வரை கோல்டுமேன் சாச் நிறுவனத்தில் இளநிலை ஆய்வாளராக இருந்தவர் ரிஷி சுனக். இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனான இவர், பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி சார்பில், 2022 முதல் 2024 வரை பிரதமராக இருந்தார். முன்னதாக 2015ல் எம்.பி.,யாகி, அரசின் பல்வேறு கமிட்டிகளில் உறுப்பினராக இருந்து உயர்ந்த ரிஷி, பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், மீண்டும் தன் பொருளாதார ஆலோசனை பணிக்கு திரும்புகிறார்.