உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காதல் ஜோடிகளின் விருப்பம்; டாப் 10 சுற்றுலா மையங்கள் இவை தான்!

காதல் ஜோடிகளின் விருப்பம்; டாப் 10 சுற்றுலா மையங்கள் இவை தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரீஸ்: உலகின் ரொமான்டிக் தலைநகராக நீண்ட காலம் முதலிடத்தில் இருந்த பாரீஸ், தற்போது 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அமெரிக்காவின் ஹவாய் தீவு முதலிடத்திற்கு வந்துவிட்டது.திருமணமான தம்பதிகள் தேனிலவு செல்வதற்கும், காதல் ஜோடிகள் உல்லாசப் பயணம் செல்வதற்கும், தம்பதிகள் ஜாலி டூர் செல்வதற்கும் தேர்வு செய்யும் நகரங்களை ரொமான்டிக் நகரங்கள் என்பர். அந்த பட்டியலில் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்தது பிரான்ஸ் தலைநகர் பாரீஸ். இப்போது நிலவரம் எப்படி, ரொமான்டிக் நகராக கருதி, எந்த நாட்டிற்கு அல்லது நகருக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்கள் என்று, 2000 அமெரிக்க ஜோடிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலோனோர், 34 சதவீதம் பேர், ஹவாய் தீவில் உள்ள மாவியை தேர்வு செய்துள்ளனர். பாரிஸ் நகருக்கு 2வது இடமே கிடைத்தது.ஹவாய் தீவுகள், தம்பதியருக்கு மிகுந்த காதல் உணர்வுகளை எற்படுத்துவதாக பலரும் கூறுகின்றனர். அங்குள்ள ரிசார்ட்ஸ், கடற்கரைகள், மூங்கில் வனம், அழகான சூரிய அஸ்தமம் ஆகியவற்றால் பலரும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து முதலிடம் தந்துள்ளனர். பாரீஸ், இப்போது 33 சதவீதம் ஜோடிகளின் ஆதரவுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்த ஆய்வை, பன்ஜெத் சுற்றுலாத்துறை டாக்கர் அமைப்புடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவுகள் இப்படி வெளியாகியுள்ளன.பட்டியலின் படி,1.மாவி, ஹவாய் 2.பாரிஸ், பிரான்ஸ் 3.ரோம், இத்தாலி 4.வெனிஸ், இத்தாலி 5.சான்சன், மெக்சிகோ6.டஸ்கனி, இத்தாலி 7.கோஸ்டாரிகா 8.பிரி்ட்டிஷ் விர்ஜின்தீவுகள் 9.செயின்ட் லுாசியா 10.சான்டோரினி, கிரீஸ் ஆகிய இடங்கள் காதல் ஜோடிகள், தம்பதிகள் விரும்பும் முதல் 10 இடங்களாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
செப் 25, 2024 20:41

அங்கெல்லாம் செல்ல வசதி இல்லாத ஜோடிகள் செல்லவிரும்புவது, செல்லுவது திரை அரங்கங்கள். ஆம், நூறு இருநூறு என்று டிக்கெட் வாங்கிக்கொண்டு, கையில் பாப்கார்ன் பாக்கெட் வாங்கிக்கொண்டு பால்கனியில் உட்கார்ந்துகொண்டு, படம் பார்க்காமல் ரொமான்ஸ் செய்வார்கள்.


Velan Iyengaar
செப் 25, 2024 19:51

நம்ம அமர்ப்பிரசாத் ரெட்டிக்கு எந்த இடம் பிடித்த இடம் என்றும் கேட்டு போடுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை