உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா - இந்தியா உறவு வெட்கக்கேடானது டிரம்ப் ஆலோசகர் மீண்டும் சர்ச்சை

ரஷ்யா - இந்தியா உறவு வெட்கக்கேடானது டிரம்ப் ஆலோசகர் மீண்டும் சர்ச்சை

நியூயார்க்:இந்தியாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய மற்றும் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வரும் அமெரிக்க அதிபரின் ஆலோசகர், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார். இந்தியா மீதான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வர்த்தகம் மற்றும் வரிக் கொள்கைகளால், இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ கடந்த சில நாட்களாக தொடர்ந்து இந்தியாவை குறிவைத்து பேசி வருகிறார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால் உக்ரைன் போர் உண்மையில், 'மோடியின் போர்' என்றார். மேலும், இந்தியா வரிவிதிப்பின் மஹாராஜா என்றும், ரஷ்யாவின் சலவை நிலையம் என்றும் பல வகையில் விமர்சித்துள்ளார். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் ஜாதியை குறிப்பிட்டு, இந்திய மக்களின் செலவில் பிராமணர்கள் லாபமடைந்து வருகின்றனர் என, அவர் கூறினார். சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் உயர்வான அந்தஸ்தில் உள்ளவர்களை, அமெரிக்காவில், 'பாஸ்டன் பிராமணர்கள்' என்று கூறுவர். இதற்கிடையே, சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த நவரோ, “இந்தியா எங்களுடன் தான் இருக்க வேண்டும்; ரஷ்யாவுடன் அல்ல. ''உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக உள்ள மோடி, இரு பெரும் சர்வாதிகாரிகளான புடின், ஜின்பிங் உடன் உறவை பேணியிருப்பது வெட்கக்கேடானது. அந்த சந்திப்பு தவறு. அவருக்கு நாங்கள் தான் தேவை, ரஷ்யா அல்ல என்பதை உணருவார் என்று நம்புகிறோம்,” என கூறியுள்ளார். 'விரைவில் பிரச்னைக்கு தீர்வு' அமெரிக்க கருவூல அமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளதாவது: இந்தியா, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு. அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடு. இறுதியில், இரண்டு பெரிய நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்கா, தற்போதுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் என்று நான் நினைக்கிறேன். இந்த சிக்கலை பேசி தீர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Shivakumar
செப் 03, 2025 11:24

ரஷ்யா - இந்தியா உறவு வெட்கக்கேடானது டிரம்ப் ஆலோசகர் . அப்போ அமெரிக்கா - பாக்கிஸ்தான் உறவு எப்படிப்பட்டது.


naadodi
செப் 03, 2025 08:04

பிராமின் என்ற சொலவடை அமெரிக்காவில் பழைய பணம் படைத்த சமுதாய மேல்தட்டு மக்களைக் குறிக்கும். இதற்கும் சாதியத்திற்கும் சம்பந்தமில்லை.


எலர்கிங்
செப் 03, 2025 08:00

பாக்கிஸ்தான் அமெரிக்க‌ உறவூ பஞ்சாமிருதமா


சமீபத்திய செய்தி