உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான்-இஸ்ரேல் போரில் ராணுவ தலையீடு: அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

ஈரான்-இஸ்ரேல் போரில் ராணுவ தலையீடு: அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

மாஸ்கோ: ஈரான்-இஸ்ரேல் போரில் ராணுவ தலையீடு தொடர்பாக, அமெரிக்காவிற்கு ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இது தொடர்பாக, ரஷ்ய அதிபர் புடினும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y850hrxk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க கூடாது என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியதாவது: இந்த சூழ்நிலையில் ராணுவத் தலையீட்டிற்கு எதிராக அமெரிக்காவை நாங்கள் எச்சரிக்க விரும்புகிறோம். எந்தவொரு நடவடிக்கையும் மிகவும் ஆபத்தானது. கணிக்க முடியாத வகையில் மோசமான விளைவுகளை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், ரஷ்யா, அமெரிக்காவை எச்சரித்துள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை ஆதரிப்பதா, இல்லையா என்பதை இன்னும் முடிவு செய்து கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

புரொடஸ்டர்
ஜூன் 20, 2025 09:08

டிரம்ப் அமெரிக்கா அதிபராக இருக்கும்வரை அமெரிக்காவை பாகிஸ்தான் தவிர பல நாடுகள் புறக்கணிக்கும்.


Senthoora
ஜூன் 20, 2025 05:39

புடின் சொல்வது சரிதான், இந்த யுத்தம் தேவை அற்றது, அமெரிக்க மூக்கை நுழைப்பது தவறு, இந்த யுத்தம் நிறுத்த படணும், இந்த யுத்தத்தில் இஸ்ரேல் வெற்றி பெற்றால், அடுத்து ஆசிய கண்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயட்சிக்கும், பாக்கித்தான், அடுத்து இந்தியா என்று தொடரும் என்று இராணுவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அமெரிக்க இஸ்ரேலை வைத்து செய்யும் நரித்தனம் .


raja
ஜூன் 20, 2025 00:04

பெரியண்ண சும்மா இருந்தாலே போதும் பிரச்சினை பெரிதாகாது.


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 22:45

சுட்ளர் ஆதரவு இருப்பதால் ஈரான் வெல்லும்.


kumar
ஜூன் 19, 2025 22:39

India support russia and Israel...what will happen


Nada Rajan
ஜூன் 19, 2025 22:00

இவங்களுக்கு வேற வேலை இல்லைங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை