வாசகர்கள் கருத்துகள் ( 2 )
டிரோன்களை ஒழித்துக்கட்ட முறையான தொழில்நுட்பம் இல்லை என்றால் சிக்கல்தான் வரும்.
சமாதானம் பேசிட்டு பெரியண்ணண் வக்காளத்தில் ரஷ்யாவை சீண்டினால் இப்படிதான் அனுபவுக்கனும்?
கீவ்: உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாடு மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதல் நீண்டு கொண்டே போகிறது. போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இச்சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரஷ்யா விமானப்படை தளம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல் நடத்தியது. ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 ரஷ்ய போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன. இந்த போர் துவங்கியதற்கு பிறகு, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு நிச்சயம் ரஷ்யா பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தி உள்ளார். இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் மீட்புப்படையினர் எனத் தெரிய வந்துள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில், உக்ரைனின் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அரசு கட்டடங்கள், 5 தனியார் சொத்துகள், 5 அடுக்குமாடி குடியிருப்புகள் என 40 சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
டிரோன்களை ஒழித்துக்கட்ட முறையான தொழில்நுட்பம் இல்லை என்றால் சிக்கல்தான் வரும்.
சமாதானம் பேசிட்டு பெரியண்ணண் வக்காளத்தில் ரஷ்யாவை சீண்டினால் இப்படிதான் அனுபவுக்கனும்?