உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்

புதுடில்லி: அமெரிக்க வரிவிதிப்புகளுக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புடின், இந்தாண்டு டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்.ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதில் இந்திய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான மாற்று நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா அல்லாமல் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் இந்தியா நெருக்கம் காட்டவும் தொடங்கியுள்ளது.இந்த நிலையில், இந்தாண்டு டிசம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார். அதிபர் புடினின் இந்தப் பயணத்தின் மூலம், இந்தியா- ரஷ்யா இடையே பொருளாதாரம் மற்றும் ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்பு உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கடைசியாக இருவரும் சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டின் போது சந்தித்து பேசினர். தொடர்ந்து, இரு வாரங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தார்.கடைசியாக 2021ல் ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்பாக அதிபர் புடின் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Barakat Ali
அக் 03, 2025 09:13

வரவேற்கிறோம் .......


மணிமுருகன்
அக் 03, 2025 00:23

அருமை


Suresh Velan
அக் 02, 2025 14:48

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதில் இந்திய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான மாற்று நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று சொல்கிறோம் , அப்ப எதுக்கு புடின் இவ்வளவு லேட்டா வருகிறார் , ஒரு flight எடுத்தால் கழுதை ஏழு எட்டு மணி நேரத்தில் இந்திய வர முடியும் , ரெண்டு மூன்று நாளில் வந்து வேலையை முடிச்சிட்டு போக வேண்டியது தானே


திகழ்ஓவியன்
அக் 02, 2025 12:16

வந்து என்ன பிரயோஜனம்


SUBBU,MADURAI
அக் 02, 2025 14:38

எப்போதும் எதிர்மறை கருத்துகளையே போட்டுக் கொண்டிருக்கும் உன்னைப் போன்ற துரோகிகளை பிடித்து முதலில் சுளுக்கு எடுக்க வேண்டும்....


vivek
அக் 02, 2025 15:32

இதுக்கு உனக்கு இருநூறு வராது திகழ்


sankaranarayanan
அக் 02, 2025 11:10

அப்போ டிசம்பரில் இன்னும் 50 விழுக்காடு வரி உயர்த்தப்படும் என்று டிரம்பு அறிவிப்பார்


Anand
அக் 02, 2025 11:08

புடின் இங்கு வருவது அல்லக்கைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.


Palanisamy T
அக் 02, 2025 10:02

1.புடின் சர்வாதிகாரி, அதற்கும் மேலானவர். இனிமேல் யாரும் எதிர்க்கமுடியாத நிலையில் அவர் என்றைக்கும் அசைக்கமுடியாத நிரந்தரத் தலைவர். அவரை எதிர்த்தவர்கள் குறிப்பாக பத்திரிகைக்கார்களின் கதி என்னவாயிற்றென்பதை உலக மறிந்ததே. இன்றைக்கும் அங்கு அதே நிலைதான். தூதரகளவில் அவர் மறியாதைக்குறிய வரவேற்புக்குரிய தலைவர். இந்த இரு உலகத் தலைவர்கள் சந்திக்கும்போது பல வர்த்தக தொழில்நுட்ப கச்சா எண்ணெய் உடன்பாடுகள் ஏற்படும் வேளையில் உலக அமைதிக்காக உக்ரைன் போர்நிறுத்தம் பற்றி இவர்கள் விவாதிப்பார்களா?


Gokul Krishnan
அக் 02, 2025 11:47

எதற்கு சர்வாதிகாரம் குறித்து விளக்க ரஷ்யா புதினை சொல்ல வேண்டும்.


vivek
அக் 02, 2025 15:34

கோகுலிடம் இருநூறு வந்திருக்கும்....


Dv Nanru
அக் 02, 2025 09:29

டிரம்ப் ஒரு புரியாத புதிர்..


veeramani
அக் 02, 2025 09:19

130 கோடி இந்தியர்கள் எங்களது அருமையான உயிர்த்தோழன் ரசியாவின் அதிபர் திரு புடின் அவர்களை வரவேற்க தயாராக உள்ளோம்


Ramesh Sargam
அக் 02, 2025 09:17

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்யா அதிபர் புடின். ஓஹோ, இதைகேள்விப்பட்டு தான், அமெரிக்க அதிபர், சீன அதிபர் ஜீ ஜின்பிங் அவர்களை அதற்கு முன்பே, அதாவது நான்கு வாரங்களுக்குள் சந்திப்பேன் என்று கூறுகிறார். மேலும் ஜீ ஜின்பிங் ஒரு ஜென்டில்மேன் என்று கூறி அவருக்கு ஐஸும் வைக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை