உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த முயற்சி: புடினுடன் டிரம்ப் பேச்சு

ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த முயற்சி: புடினுடன் டிரம்ப் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்:உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் உடன் போனில் பேசினார்.ரஷ்யா-உக்ரைன், போர் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விரைவில் இரு நாடுகளுக்கிடையேயான போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேரடியாக போனில் பேசி முடிவெடுப்பேன் என்று இரு தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.வாரத்திற்கு சராசரியாக 5000க்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் உக்ரைன் வீரர்களைக் கொல்லும், போரை நிறுத்துவது குறித்து பேசுவேன் என்றும்,விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும். மேலும் இந்த வன்முறை முடிவுக்கு வரும் என்று நம்புவதாக கூறியிருந்தார்.அதன்படி, இன்று புடினுடன் போனில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, டிரம்ப் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் நேட்டோ தலைவர்களை அழைத்து பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

மீனவ நண்பன்
மே 20, 2025 05:12

வொயரு பிஞ்சு போன மாதிரி இருக்கே ..பார்த்திபன் கிட்ட மாட்டின வடிவேல் நிலைமையில் ட்ரம்ப் ..


Kasimani Baskaran
மே 20, 2025 03:59

பேச்சா அல்லது இந்தியாவுடன் மல்லுக்கட்டியது போல இதுவும் ஒரு ஏமாற்று வேலையா என்பதை ஆராய வேண்டும்.


ramesh
மே 20, 2025 00:15

Dear Drumph and Putin, stop killing people


புதிய வீடியோ