உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தாய்லாந்து கடற்கரையில் யோகா பயிற்சி: ராட்சத அலையில் சிக்கி ரஷ்ய நடிகை பரிதாப பலி

தாய்லாந்து கடற்கரையில் யோகா பயிற்சி: ராட்சத அலையில் சிக்கி ரஷ்ய நடிகை பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாங்காக்: ரஷ்ய நடிகை கமிலா பெல்யட்ஸ்கயா, 24, தாய்லாந்து கடற்கரையில் யோகா பயிற்சி செய்தபோது, ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.ரஷ்ய நடிகையான கமிலா பெல்யட்ஸ்கயா, தனது காதலனுடன் விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்து சென்றிருந்தார். அங்குள்ள கோ சாமுய் கடற்கரையில், லாட் கோ வியூ பாயின்ட்டுக்கு சென்று யோகா செய்தார்.அவர் யோகா செய்து கொண்டிருந்தபோது, ராட்சத அலை எழும்பி, அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது.சம்பவம் நடக்கும்போது அவருடன் அவருடைய ஆண் நண்பரும், வேறு சிலரும் அருகில் இருந்துள்ளனர். ஆனாலும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. கமிலா யோகா பயிற்சி செய்தபோது, ராட்சத அலை அவரை இழுத்துக் கொண்டு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவலாக பரவி வருகிறது.அவருடைய உடல் சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்டு, அதன் பின்னர் தேடி கண்டுபிடிக்கப்பட்டதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Asha rajasekar
டிச 06, 2024 15:14

விவேகானந்தர் போல யோக பயிற்சி செய்ய வேண்டும் என விருப்ப பட்டிருப்பார்


saravan
டிச 03, 2024 11:32

யோகா வின் சக்தி அறிவாளி அறிவான்


Barakat Ali
டிச 03, 2024 09:51

யோகாவுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கும் போல .....


Ramamoorthy M
டிச 03, 2024 13:28

நம்ம சக்தி எல்லாம் வீட்டுப் பெண்களை ...போட வைப்பதில் மட்டுமே உண்டு!


Mani . V
டிச 03, 2024 05:52

அது யோகா செய்ய வேறு இடம் கிடைக்கவில்லையா?


சப்பா
டிச 03, 2024 03:46

கடல்ல போயித்தான் பண்ணனுமா?