உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போலந்தில் ரஷ்யா டிரோன் தாக்குதல்: தவறுதலாக நடந்திருக்கலாம் என்கிறார் அதிபர் டிரம்ப்

போலந்தில் ரஷ்யா டிரோன் தாக்குதல்: தவறுதலாக நடந்திருக்கலாம் என்கிறார் அதிபர் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: போலந்தில் ரஷ்யா டிரோன் தாக்குதல் தவறுதலாக நடந்திருக்கலாம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. போலந்து வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. போலந்து வான்வெளியைப் பாதுகாப்பதற்கு பங்களிக்கும் வகையில் மூன்று ரபேல் ஜெட் விமானங்களை நிறுத்துமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உத்தரவிட்டார். அவர், '' ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பு எங்கள் முதன்மையான முன்னுரிமை. ரஷ்யாவின் வளர்ந்து வரும் மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்' என தெரிவித்தார். போலந்தின் துணைப் பிரதமர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, ''இது ரஷ்யாவின் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலாகும்'' என குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து போலந்து பார்லிமென்டில் பிரதமர் டொனால்ட் டஸ்க் பேசியதாவது: போலந்து போரில் ஈடுபடவில்லை என்றாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு நிலைமை மிகவும் ஆபத்தானது, என்றார். இது தொடர்பாக நிருபர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: போலந்தில் ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடையவில்லை. அது முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். டிரோன் தாக்குதல் தவறுதலாக நடந்திருக்கலாம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ManiMurugan Murugan
செப் 13, 2025 00:08

முதன்முதலாக வளர்ந்த நாட்டு அதிபர் போல் பேசியுள்ளார் நன்றி


M Ramachandran
செப் 12, 2025 18:37

அவசரப்பட்டு வாய் கொழுப்பெடுத்து பேசினால் ரஷ்யா நிச்சயம் பதிலடி கொடுக்கும். இப்போது உள்ளநிலைமையில் அமெரிக்கா அனாவசியமாக உங்க்ளுக்கு நேசக்கரம் நீட்டும் நிலையில் இல்லை தெளிவாக புரிந்து கொள்ள வில்லை என்றால் நஷ்டம் உஙகளுக்கு தான்.வீர வசனமெல்லாம் வேலைக்கு ஆகாது.ஏற்கனவே பொருளாதாரத்தில் தள்ளாடி கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்து கொள்ளவேண்டும். உங்க கொள்கையால் அமைதி மார்கத்தினரை வா...வா... என்று வரவழைத்து அவர்களை மகிழ்விக்க பலமற்றவர்கள் வரி பணத்தில் செலவு செய்து பொருளாதாரமே ஸ்தம்பித்து போயிருக்கு. யோசனையுள்ள அதிபர் தேவை.


KRISHNAN R
செப் 12, 2025 11:28

உலகில் எங்கே இருந்தாலும் அண்ணன் ஆஜர்... அப்படி என்றால்.... அமெரிக்கா என்ன செய்கிறது.. என்று தெளிவாக தெரிவித்துள்ளார்


Anand
செப் 12, 2025 10:39

அந்த பயம் இருக்கட்டும்.


K.Ravi Chandran, Pudukkottai
செப் 12, 2025 09:18

இதை புதினே சொன்னது மாதிரி தெரியலியே? இவர் ஏன் சொல்கிறார்? ரஷ்யாவோட செய்தி தொடர்பாளரா டிரம்ப் என்னக்கி ஆனார்?


அப்பாவி
செப் 12, 2025 08:22

போலந்தும் தெரியாம ட்ரோன்களை சுட்டு வீழ்த்திடிச்சு. இது போருக்கான நேரமில்லை ஹைன்.


vivek
செப் 12, 2025 10:45

ரொம்ப பாவம்


பாலாஜி
செப் 12, 2025 08:22

ரஷ்யா அதிபருக்கு அமெரிக்கா அதிபர் பயப்படுவது வெளிப்பட்டது.


முக்கிய வீடியோ