உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய திரைப்படங்களை ரசித்து பார்க்கும் ரஷ்ய மக்கள்

இந்திய திரைப்படங்களை ரசித்து பார்க்கும் ரஷ்ய மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: “உக்ரைனில் நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான காலக்கெடுவை குறிப்பிடுவது கடினம்,” என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, 'பிரிக்ஸ்' என்றழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ரஷ்யாவின் கசான் நகரில் வரும் 22 - 23ல் நடக்கிறது. இதில், பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி:இந்திய பிரதமர் மோடி என் நண்பர்; சமீபத்தில் அவரை சந்தித்த போது, ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார். மோடியின் அக்கறைக்கு ரஷ்யா நன்றி தெரிவிக்கிறது. ரஷ்யாவில் இந்திய திரைப்படங்களுக்கு நல்ல மவுசு இருக்கிறது. பிரதமர் மோடியை சந்திக்கும் போது, இந்திய திரைப்படங்களுக்கு ஊக்கமளிப்பது குறித்து பேசுவேன்.உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான காலக்கெடுவை குறிப்பிடுவது கடினம். அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு எங்களை போரில் தள்ளியது. எங்களுக்கு எதிராக இந்தப் போரை நடத்துவதில் நேட்டோ சோர்வடையும்.போரில் எங்களது கை ஓங்கி இருக்கிறது; நாங்கள் வெற்றி பெறுவோம்; சமாதான பேச்சை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அந்த முயற்சிகளில் இருந்து உக்ரைன் பின்வாங்குகிறது.'பிரிக்ஸ்' என்பது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல. இந்திய பிரதமர் மோடி கூறியது போல், இது மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதித்துவம் இல்லாத ஓர் அமைப்பு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMAKRISHNAN NATESAN
அக் 20, 2024 10:03

ரஷ்யர்களுக்கு கட்டுமரத்தின் பெண் சிங்கம் போன்ற திரைப்படங்களைக் கட்டாயப்படுத்தி போட்டுக் காட்டணும்.. வாழமுடியாதவர்கள், வான்கோழி இதையெல்லாம் ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்து படிக்கக் கொடுக்கணும்... அப்புறம் இந்தியா பக்கமா தலைவெச்சு படுக்க மாட்டாங்க .....


Kasimani Baskaran
அக் 20, 2024 07:20

பல ஆசிய நாடுகளிலும் இந்திய திரைப்படங்கள் விரும்பி பார்க்கப் படுகிறது. ஜப்பானில் ரஜினி நடித்த படங்கள் மிக பிரபலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை