உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவின் அதிநவீன 3டி பிரின்டர்: விரைவில் இந்தியா கொண்டு வர திட்டம்

ரஷ்யாவின் அதிநவீன 3டி பிரின்டர்: விரைவில் இந்தியா கொண்டு வர திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யாவின், 'ரோசாட்டம்' நிறுவனம் உருவாக்கியுள்ள அதிநவீன, 'எலக்ட்ரான் பீம் 3டி பிரின்டர்' விரைவில் இந்தியா வர உள்ளது. 'இதில் பணத்தைத் தவிர மற்ற அனைத்தையும் அச்சிட முடியும்' என, கூறப்படுகிறது. ரஷ்யாவின், 'ரோசாட்டம் ஸ்டேட் கார்ப்பரேஷன்' என்ற அரசு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, 'எலக்ட்ரான் பீம் 3டி பிரின்டர்' விரைவில் இந்தியா வரவுள்ளது. இந்த அதிநவீன இயந்திரம், ராக்கெட்டுகள், அணு உலைகள் போன்ற அதிநவீன தொழில்நுட்பத் துறைகளுக்கு தேவையான துல்லியமான பாகங்களை உருவாக்கும் திறன் உடையது. இந்த பிரின்டரில், 'அ டிக்டிவ் மேனுபாக்சரிங்' என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், டைட்டானியம் மற்றும் பிற உலோகங்களின் பொடிகளை உருக்கி, செதுக்கி, சிக்கலான பாகங்களையும் உருவாக்க முடியும். இதில் பொருட்கள் அடுக்கடுக்காக உருவாக்கப்படுவதால், பாரம்பரிய முறைகளை விட குறைந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி சிக்கலான வடிவமைப்புகளையும் இதன் வாயிலாக உருவாக்க முடியும். இத்தொழில்நுட்பம் விண்வெளி, பாதுகாப்பு, அணுசக்தி துறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், உற்பத்தி செலவுகளை குறைத்து, வளர்ச்சிக்கான செயல்முறை களை வேகப்படுத்த உதவும். இந்த இயந்திரம், நம் அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், உயர் தொழில்நுட்ப உற்பத்தியை உள்நாட்டிலேயே மேம்படுத்த உதவும் என்பதால், இந்த இயந்திரத்தை இந்தியா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மதிப்பு 20 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. மேலும், இது இந்தியாவின் ரகசியமான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Prince Paul
செப் 26, 2025 12:16

Thanks for the information


Dv Nanru
செப் 26, 2025 08:46

முப்பரிமாணம் அச்சுப்பொறியில் புதிய தொழில்நுட்பத்தில் ரஷ்யா வெற்றி இந்த சேர்க்கை உற்பத்தி additive manufacturing என்பது ரஷ்யாவின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இதை பொதுவாக ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது இரும்பு அல்லது பிளாஸ்டிக் மரம் போன்ற மூலப் பொருள்களை எடுத்து அதை மாவாக்கி அடுக்கடுக்காக சேர்த்து ஒரு பொருளை உருவாக்க முடியும் அதேபோல் இதை எங்கெங்கு பயன்படுத்த முடியும் மருத்துவத்துறையில் அவசர அறுவை சிகிச்சை உபகரணங்கள் விமானம் மற்றும் விண்வெளித் துறை வாகன உற்பத்தி கட்டுமான துறை ஆகியவற்றில் பயன்படுத்த முடியும். சுருக்கமாக சொன்னால் பொருளை அகற்றி உருவாக்குவது அல்லது சேர்த்து உருவாக்கும் உற்பத்தி முறையாகும் மூலப் பொருளை அடுக்கடுக்காக சேர்த்து பொருள் உருவாக்கும் உற்பத்தி முறையாகும் இதை பொதுவாக முப்பரிமாணம் என்று சொல்வார்கள் அதாவது 3D இதை பாரம்பரிய உற்பத்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு பெரிய உலோகத்தை வெட்டி அல்லது துளையிட்டு ஒரு பொருளை தயாரிக்கப்படுகிறது செயற்கை உற்பத்தி என்பது பவுடர், பிளாஸ்டிக் துகள்கள் அல்லது உலோகத்தை அடுக்கடுக்காக சேர்த்து உருவாக்கப்படுவது தான் additive manufacturing method except Russian nobody is this technology very new for this world. முக்கிய நுட்பங்கள் 1.பிளாஸ்டிக் கை உருக வைத்து அடுக்கடுக்காக பதிக்கும் முறை 2. லேசர் மூலம் பவுடர் பிளாஸ்டிக், மெட்டலை உருக்கி இணைக்கும் முறை 3. லேசர் கதிரால் ரசாயன திரவத்தை காய்ச்சி அடுக்கி உருவாக்கும் முறை இதன் பயன்பாடுகள் 1. மருத்துவத்துறையில் கால், கைகள், பல், செயற்கை எலும்புகள் மூலம் மருத்துவத்துறையில் புதிய சகாப்தம் படைக்க முடியும். 2. விமானம் மற்றும் விண்வெளி விண்கலத்திற்கு தேவையான இலகுரக உதிரி பாகங்கள் மிக எளிமையாக தயாரிக்க முடியும், 3. வாகனத்துறையில் புரோட்டோடைப் பாகங்கள் உருவாக்க முடியும் 4. கட்டுமானத்துறையில் 3d முப்பரிமாணம் பிரிண்ட் வீடுகள் கட்ட முடியும் 5. இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய உபகரணங்கள் தனிப்பட்ட வடிவமைப்பு பொருட்களை உருவாக்க முடியும் குறைகள் என்று சொல்லப் போனால் 1. உற்பத்தி மெதுவாக இருக்கும் 2. விலை அதிகமாக இருக்கும் 3. பெரிய அளவிலான உற்பத்திக்கு சாத்தியமில்லை ஆனால் போகப் போக அதை சரி செய்து விடலாம் அதேபோல் மிக முக்கியமானது இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விண்வெளியில் உள்ள ரேர் மெட்டீரியல்ஸ் பூமிக்கு கொண்டு வந்து அணுசக்தி துறை மற்றும் எரிசக்தி துறைக்கு பயன்படுத்த முடியும். அதற்காக நாம் ரஷ்யர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஏனென்றால் இந்த தொழில்நுட்பத்தை முதன் முதலில் இந்தியாவிற்கு தான் தருகிறார்கள். வேண்டுமென்றால் டொனால்ட் ட்ரம் இந்தியா செயற்கை உற்பத்தி 3d பிரிண்டரை நாம் வாங்க கூடாது என்று கட்டளை கூட போடுவார் அதே போல் ரஷ்யாவிற்கும் கட்டளை இடுவார் நீங்கள் இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொடுக்கக் கூடாது என்று..


Dv Nanru
செப் 26, 2025 07:30

இந்த சேர்க்கை உற்பத்தி additive manufacturing என்பது ரஷ்யாவின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இதை பொதுவாக ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது இரும்பு அல்லது பிளாஸ்டிக் மரம் போன்ற மூலப் பொருள்களை எடுத்து அதை மாவாக்கி அடுக்கடுக்காக சேர்த்து ஒரு பொருளை உருவாக்க முடியும் அதேபோல் இதை எங்கெங்கு பயன்படுத்த முடியும் மருத்துவத்துறையில் அவசர அறுவை சிகிச்சை உபகரணங்கள் விமானம் மற்றும் விண்வெளித் துறை வாகன உற்பத்தி கட்டுமான துறை ஆகியவற்றில் பயன்படுத்த முடியும். சுருக்கமாக சொன்னால் பொருளை அகற்றி உருவாக்குவது அல்லது சேர்த்து உருவாக்கும் உற்பத்தி முறையாகும் மூலப் பொருளை அடுக்கடுக்காக சேர்த்து பொருள் உருவாக்கும் உற்பத்தி முறையாகும் இதை பொதுவாக முப்பெருமானம் என்று சொல்வார்கள் அதாவது 3D இதை பாரம்பரிய உற்பத்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு பெரிய உலோகத்தை வெட்டி அல்லது துளையிட்டு ஒரு பொருளை தயாரிக்கப்படுகிறது செயற்கை உற்பத்தி என்பது பவுடர், பிளாஸ்டிக் துகள்கள் அல்லது உலோகத்தை அடுக்கடுக்காக சேர்த்து உருவாக்கப்படுவது தான் attitude manufacturing method accept Russian nobody is this technology very new for this world. முக்கிய நுட்பங்கள் 1.பிளாஸ்டிக் கை உருக வைத்து அடுக்கடுக்காக பதிக்கும் முறை 2. லேசர் மூலம் பவுடர் பிளாஸ்டிக், மெட்டலை உருக்கி இணைக்கும் முறை 3. லேசர் கதிரால் ரசாயன திரவத்தை காய்ச்சி அடுக்கி உருவாக்கும் முறை இதன் பயன்பாடுகள் 1. மருத்துவத்துறையில் கால், கைகள், பல், செயற்கை எலும்புகள் மூலம் மருத்துவத்துறையில் புதிய சகாப்தம் படைக்க முடியும். 2. விமானம் மற்றும் விண்வெளி விண்கலத்திற்கு தேவையான இலகுரக உதிரி பாகங்கள் மிக எளிமையாக தயாரிக்க முடியும், 3. வாகனத்துறையில் புரோட்டோடைப் பாகங்கள் உருவாக்க முடியும் 4. கட்டுமானத்துறையில் 3d முப்பெருமான பிரிண்ட் வீடுகள் கட்ட முடியும் 5. இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய உபகரணங்கள் தனிப்பட்ட வடிவமைப்பு பொருட்களை உருவாக்க முடியும் குறைகள் என்று சொல்லப் போனால் 1. உற்பத்தி மெதுவாக இருக்கும் 2. விலை அதிகமாக இருக்கும் 3. பெரிய அளவிலான உற்பத்திக்கு சாத்தியமில்லை ஆனால் போகப் போக அதை சரி செய்து விடலாம் அதேபோல் மிக முக்கியமானது இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விண்வெளியில் உள்ள ரேர் மெட்டீரியல்ஸ் பூமிக்கு கொண்டு வந்து அணுசக்தி துறை மற்றும் எரிசக்தி துறைக்கு பயன்படுத்த முடியும். அதற்காக நாம் ரஷ்யர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஏனென்றால் இந்த தொழில்நுட்பத்தை முதன் முதலில் இந்தியாவிற்கு தான் தருகிறார்கள். வேண்டுமென்றால் டொனால்ட் ட்ரம் இந்தியா செயற்கை உற்பத்தி 3d பிரிண்டரை நாம் வாங்க கூடாது என்று கட்டளை கூட போடுவார் அதே போல் ரஷ்யாவிற்கும் கட்டளை இடுவார் நீங்கள் இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொடுக்கக் கூடாது என்று..


raja
செப் 26, 2025 14:03

இது ஏற்கனவே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே ஐ ஐ டி, என் ஐ டி, ஐ ஐ ஐ டி எம் , மற்றும் பெரிய தனியார் பல்கலை கழகங்களுக்கு தனியார் கம்பெனிகளுக்கும் வந்து பல ஆராய்ச்சிகள் போய் கொண்டு இருக்கிறது ... என்னமோ இப்போதான் இந்த தொழில் நுட்பம் இந்தியாவுக்கு புதிதாக வருவது போல் கருத்து...இந்த மிசின் எதோ ஒரு குறிப்பிட்ட முக்கியமான பாகங்களை தயாரிக்க இந்தியா வாங்குகிறது...


Vasan
செப் 26, 2025 06:54

"Make in india" is the slogan by Modi ji. Then how can Central Government import this printer? Appears contradictory to what our Prime Minister has appealed to the country.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 26, 2025 11:11

60 ஆண்டு காலம் வீணாக நேரத்தை வீணடித்து விட்டோம். இழந்த நேரம் காலமும் திரும்ப நமக்கு கிடைக்காது. நமது மக்கள் தொகை வேறு 145 கோடி ஆகிவிட்டது. இனி உயர் தொழில்நுட்பம் நாமே கண்டுபிடித்து செய்வது என்பது நேரமும் காலமும் அதிகமாக எடுத்துக் கொள்ளும். இந்தியாவிற்கு நேரமும் காலமும் பற்றாக்குறையாக உள்ளது. 2047க்குள் இப்போது உள்ள பொருளாதாரத்தை விட மும்மடங்கு பொருளாதாரம் நமக்கு தேவை. அதற்கு சில உபயோகத்தில் உள்ள தொழில்நுட்பங்கள் வெளி நாடுகளில் இருந்து கிடைக்கும் என்றால் நாம் அதனை உபயோகப்படுத்தி கொள்வது தான் புத்திசாலித்தனம். தற்போது உள்ள மத்திய அரசு 11 ஆண்டுகள் ஆன பின்பும் காங்கிரஸை குறை கூறுகிறது என்பது சிலரது கருத்து. என்ன செய்வது காங்கிரஸ் 60 ஆண்டுகளை வீணடித்து விட்டதே.


தியாகு
செப் 26, 2025 06:08

இந்தியா கொண்டுவந்ததும் கட்டுமர திருட்டு திமுகவினர் கண்ணில் படாமல் பார்த்துக்கொள்ளவும். இல்லனா யாருக்கும் தெரியாமல் எங்குமே நிரூபிக்கமுடியாதபடி இந்த மெஷினை ஆட்டையை போட்டு பழைய இரும்பு கடையில் விற்றுவிட்டு அந்த பணத்தில் டாஸ்மாக் சாராயம் அல்லது கள்ள சாராயம் வாங்கி குடித்துவிட்டு ரோட்டில் செல்லும் பெண்களை வம்புக்கு இழுப்பார்கள்.


Kasimani Baskaran
செப் 26, 2025 03:54

நுட்பமான பாகங்களுக்கு 3டி என்பது ஒரு வகை பொழுது போக்கு - துல்லியம் என்பதற்கும் 3டி க்கும் சம்பந்தம் கிடையாது. குத்து மதிப்பாக மட்டுமே நுட்பமான பாகங்களை உருவாக்கலாம். ஆனால் இவர்கள் சொல்வது வேறாக இருக்கிறது.


Ramesh Sargam
செப் 26, 2025 02:27

இந்தியா கொண்டுவந்தால் அந்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கண்ணில் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏன் என்றால் அவர்கள் ஆட்சியில் இந்தியாவின் currency printing இயந்திரத்தையே நம் எதிரி பாகிஸ்தானுக்கு கொடுத்ததாக பரவலாக ஒரு செய்தி உள்ளது.


புதிய வீடியோ