உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகை ஆச்சர்யப்படுத்திய ஆபரேஷன் ஸ்பைடர்வெப்; உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா திணறல்!

உலகை ஆச்சர்யப்படுத்திய ஆபரேஷன் ஸ்பைடர்வெப்; உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா திணறல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: மூன்று ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் போரில், இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது 'ஆபரேஷன் ஸ்பைடர்மேன் வெப்' என்ற பெயரில் உக்ரைன் தாக்குதல் நடத்தி திணறடித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா 2022ம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளைத் தாண்டியும் போர் நீடிக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், நிபந்தனைகளுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக்கொள்ளவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d3eg4569&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மூன்று ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் போரில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் நேற்று நடத்தியது. ட்ரோன்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், ரஷ்யாவின், 40 போர் விமானங்களை உக்ரைன் தகர்த்துள்ளது. இது, இந்த போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சேதமாக கருதப்படுகிறது.உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, உக்ரைன் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்யாவுக்கு 7 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் கணித்துள்ளனர். போர் நடக்கும் பகுதிகளை கடந்து, ரஷ்யா நிலப்பரப்பில் நீண்ட துாரத்துக்கு உட்பகுதிக்கு வந்து இந்த தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் நடத்தியுள்ளது. மிக நீண்ட தொலைவாக, 4 ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் சைபீரியாவில் ஒரு விமானப்படை தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு உக்ரைன் ராணுவம், ட்ரோன்களை ரஷ்யாவுக்குள் லாரிகளில் கடத்திச்சென்று பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல், ரஷ்யாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒன்று என்று மேற்கத்திய நாடுகளை சேர்ந்த போர் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு மிகப் பயங்கரமான பதிலடி தருவதற்கு ரஷ்யா தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முர்மான்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ஐந்து விமான தளங்கள் மீது உக்ரைன் தாக்குதல்கள் நடத்தியது. இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் விமானநிலையங்கள் மீதான அனைத்து தாக்குதல்களும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. 162 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

visu
ஜூன் 02, 2025 21:03

இது போரே இல்லை உக்ரைன் செய்தது தீவிரவாத செயல் ரஷ்யா உக்ரைனின் 3 வருடமா ஒழிக்க முடியாமலா இருக்கிறது முறைப்படி போர் செய்கிறார்கள் அதனால் தாமதம் இனி வரும் பதில் தாக்குதல்கள் உக்ரைன் தாங்காது


பேசும் தமிழன்
ஜூன் 02, 2025 18:40

அடுத்த நாட்டின் பேச்சை கேட்டு..... உக்ரைன் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டு கொண்டு இருக்கிறார்கள்.... இதனால் அழிவு காலம் ஆரம்பம்... அப்போ கூட்டாளி யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள்.


என்றும் இந்தியன்
ஜூன் 02, 2025 17:15

ரஷ்யா உக்ரைன் மீது ஆபரேஷன் சிந்தூர் போல நடத்திவைக்க இந்தியாவிடம் உதவி கேட்கும்


shyamnats
ஜூன் 02, 2025 16:47

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் துணையோடு உக்ரைன் நாடு , தவறான பாதையில் சென்று தன் மக்களை படு குழியில் தள்ள போகிறது. ஜப்பான் மீது அணு குண்டு போட்ட அமெரிக்கா மீது மற்ற நாடுகள் எடுத்த தண்டனை தான் என்னவாக இருந்தது ? ஒன்றுமில்லை. இப்போதே ஸ்பெஷல் தனிமங்களை கொடுப்பதற்கு ஒத்துக்கொண்டதன் மூலம் அடிமை சாசனம் எழுதி விட்டார் ஜெலன்ஸ்கி .


Hari
ஜூன் 02, 2025 16:11

எந்த வம்புக்கும் செல்லாத ரஸ்யாவை ஈரோப் நாடுகள் அமெரிக்காவின் துணையோடு உக்ரைனின் கோமாளி ஜெலன்ஸ்கியை ஜோக்கர் வேடத்தில் இருந்து வில்லன் வேடத்திற்கு உயர்த்தியது உக்ரைனுக்கும் மக்களுக்கும் ஆபத்து ,புடின் இதுவரை பூனைக்குட்டியென நினைத்து விளையாடினார் ஆனால் ஜெலன்ஸ்கி அதை புரிந்துகொள்ளாமல் புடின் கையை கடித்துவிடடார் ஜப்பான் மீது அணுக்கூண்டு வீசும் வரை ஜப்பான் அடங்கவில்லை தன நாட்டு மக்கள் பல லட்சம் பேர் அணுகுண்டுகளால் செத்துவிழுந்தபோது அடங்கியது அதுபோல ஜெலன்ஸ்கி செமையாக தன மைக்கை சிக்கலில் கொள்கிறார் .


nagendhiran
ஜூன் 02, 2025 14:59

எப்படி இந்தியாவை பாக்கிஸ்தான் தாக்கியதாக வெற்றி கொண்டாட்டம் கொண்டாடியது மாதிரியா? உக்ரைன் ஒரு புள்ள பூச்சு? ரஷ்யாவில் எதிரி நாடுகள் உதவி செய்து தாக்குதல் நடத்துவது ஆச்சிரியம் ஒன்றும் இல்லை? எப்படி பாக்கிஸ்தானுக்கு உதவிய சீனா மாதிரி எதிரி எதிரி நண்பன் மாதிரி? இந்தியாவை போல ரஷ்யாவும் திரும்பி அடித்தால் பாக்கிஸ்தான்"மாதிரி தாங்காமல் வெள்ளை கொடி உக்ரைன் காட்டும்


djivagane
ஜூன் 02, 2025 14:52

இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனத்தில் செய்வதைப் போல உக்ரைனில் ரஷ்யா செய்ய வேண்டும் நாட்டை அழித்து உக்ரேனிய தலைவர்களை படுகொலை செய்தல்


M. PALANIAPPAN, KERALA
ஜூன் 02, 2025 14:38

எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை, இறைவன்தான் நல்ல புத்தியை கொடுக்கவேண்டும்


ஆரூர் ரங்
ஜூன் 02, 2025 14:03

போர் என்றும் தீர்வாகாது. ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு இணங்க வேண்டும்.முழு உக்ரேன் நாட்டையும் பிடிக்கும் ஆசையை விட வேண்டும். ரஷ்யமொழி பேசும் ஊரெல்லாம் ரஷ்யாவுடையது எனக் கேட்பது அபத்தமானது. ஆங்கிலம்,பிரஞ்சு பேசப்படும் எல்லா நிலப்பரப்புகளும் தம்முடைய நிலம் என்று இங்கிலாந் து, ஃபிரான்ஸ் உரிமை கொண்டாடுவதில்லை. உக்ரேன் மக்கள் பாவம். வல்லரசுகளின் தலையீட்டால் பல சிறு நாடுகள் அச்சத்தில் உள்ளன.


Lakshmanan
ஜூன் 02, 2025 22:28

தமிழ் நாடடு அப்போ. சேர சோழ பாண்டிய நாடு ஓகே வா . உக்ரைன் நட்ட வில் சேரக்கூடாது என்ற உடன் பாட்டில் miiriyathu


Diraviam s
ஜூன் 02, 2025 13:55

Russia is a good friend for INDIA. Weak Russia is not good news to us.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை