உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சமோவா நாட்டு தேர்தல்; ஆளுங்கட்சிக்கு வெற்றி

சமோவா நாட்டு தேர்தல்; ஆளுங்கட்சிக்கு வெற்றி

வெலிங்டன்; சமோவா நாட்டில் ந டந்த தேர்தலில், ஆளுங்கட்சி வென்றது. ஆனால், நாட்டின் முதல் பெண் பிரதமரான பியாமி நவோமி மாதாபா வெளியேறுகிறார் . மேற்கு பசிபிக் கடலில் உள்ள சமோவாவில், 2021ல் நடந்த தேர்தலில் வென்று, நாட்டின் முதல் பெண் பிரதமரானார் பியாமி நவோமி மாதாபா. ' பாஸ்ட்' கட்சியைச் சேர்ந்த இவர் அக்கட்சியில் இருந்து விலகி புதிய சமோவா ஒற்றுமை கட்சியை உருவாக்கினார். சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், ஆளும் கட்சியான பாஸ்ட் வென்றது. பிரதமரின் கட்சி, மூன்று இடங்களில் மட்டுமே வென்றது. பாஸ்ட் கட்சியின் தலைவரான பொலடய்வோ பிரதமராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ