வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கடவுளுக்கு நன்றி
thiruttu theeyamuka Stalin responsible for this accident he must resign!
சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில், 360 டிகிரி ராட்டினம் திடீரென உடைந்து விழுந்தது. இதில் 20 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 360 டிகிரி ராட்டினம் திடீரென உடைந்து விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை அந்த இடத்தை விட்டு வெளியேற்றி உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.இதில் 20 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மேலும், படுகாயம் அடைந்த மூன்று பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் ராட்டினத்தின் மையக் கம்பம் இரண்டு பகுதிகளாக உடைந்து விழும் பகீர் காட்சி இடம் பெற்றுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில், பல இளைஞர்களும் பெண்களும் ராட்டினத்தில் ஆர்வமுடன் சவாரியில் இருந்தனர்.திடீரென்று, ஒரு வெடிக்கும் சத்தம் கேட்டு, ராட்டினத்தின் ஒரு பகுதி இரண்டாக உடைந்து விழுந்தது. ராட்டினத்தில் பயணம் செய்தவர்கள் கடும் பீதி அடைந்து அலறல் சத்தமிட்டனர். அந்தக் கூட்டத்தில் இருந்த சிலர் காப்பாற்றுமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டில்லியில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. டில்லியில் உள்ள கபாஷேரா அருகே உள்ள பார்க்கில் ராட்டினம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடவுளுக்கு நன்றி
thiruttu theeyamuka Stalin responsible for this accident he must resign!