உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கேரளாவை சேர்ந்தவருக்கு சவுதியில் மரணத்தண்டனை அறிவிப்பு

கேரளாவை சேர்ந்தவருக்கு சவுதியில் மரணத்தண்டனை அறிவிப்பு

ரியாத்: சவுதி அரேபியரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்தவருக்கு சவுதியில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டது.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செரும்பா என்ற பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர் அப்துல்ரகுமான் 63. இவர் மீதான நடவடிக்கை குறித்து சவுதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்; அப்துல்காதர் அப்துல்ரகுமான் சவுதி பிரஜையை கொலை செய்த வழக்கில் ஷரியத் கோர்ட் விசாரித்து மரணத்தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்துல்காதர் சுப்ரீம் கோர்ட்டில் (ராயல் கோர்ட் ) அப்பீல் செய்தார். இது நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து ரியாத் சிறையில் உள்ள அவர் போலீஸ் கஸ்டடியில் ஒப்படைக்கப்பட்டார். கொலை நடந்த இடத்தில் அப்துல்காதரின் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்துல்காதரால் கொலை செய்யப்பட்ட நபர் யார் , பெயர் என்ற விவரம் உள்துறை வெளியிடவில்லை.

மற்றொரு கிரைம்: தம்பதியினர் கொலை

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் அணூப்மோன் 37, ரம்யாமோல் 28 இருவரும் சவுதியில் அல்கோபார் தவுபா என்ற இடத்தில் அவரது வீட்டில் பிணமாக கிடந்தனர். கொலையா, தற்கொலையா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. வீட்டில் 5 வயது குழந்தை அழுது கொண்டிருந்தது. இதன் மூலம் இந்த சம்பவம் வெளியே தெரிந்தது.

ஆண்டுதோறும் பலர்

2022 ல் 81 பேரும், 2023 ல் 170 பேரும், 2024 ல் 106 பேரும் மரணத்தண்டணை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 31, 2024 13:16

இந்தியாவிலும் கொலை, கற்பழிப்பு அதிகம் செய்வது யார் ????


Kumar Kumzi
ஆக 31, 2024 12:18

அடப்பாவத்தே எஜமான் அடிமையையே போட்டு தள்ளிட்டாரே ஹீஹீஹீ


M Ramachandran
ஆக 31, 2024 11:36

முஸ்லீம் நாடுகளின் தண்டனையய மிக்க கடுமையானது என்று தெரிந்தும் அங்கு வேலைய்ய தேடி ஏன் விட்டில் பூச்சியை போல் போய் விழுகின்றனர்.


அப்புசாமி
ஆக 31, 2024 17:04

அதானே உள்ளூரிலேயே கொலை, கொக்கை, கட்டப்பஞ்சாயத்துன்னு தொழில் பண்ணலாமே. நல்ல பாதுகாப்பு உண்டே.


அப்பாவி
ஆக 31, 2024 10:52

அதுதான் யா சவுதி சுப்ரிம் கோர்ட். இங்கே முதல்ல தண்டனை யை நிறுத்தி மேல் நாட்டாமையைக் காட்டுவாங்க.


அப்பாவி
ஆக 31, 2024 10:50

சவூதியிலிருந்து வந்து இங்கே கொலை பண்ணுனாலும் நம்ம ஆளுங்க முப்பதாயிரம் பக்கத்துக்கு குற்றப்பத்திரிகை தயார் செஞ்சு சவுதி ஆளு எங்கே போனாரு? என்ப பிரியாணி சாப்புட்டாரு போன்ற முக்கிய விவரங்களை பதிவு செஞ்சு பிரியாணி ஊசிப் போச்சுன்னு பிரியாணி கடைக்காரரை கைது செஞ்ச்ய், சீல் வெச்சு கேஸ் எங்கெங்கியோ போய், போதிய ஆதாரமில்லைன்னு சொல்லி கொலையாளியை விடுதகை செஞ்சு சுபம் போட்டுருவாங்க.


Kasimani Baskaran
ஆக 31, 2024 14:36

உச்சப்பஞ்சாயத்தார் உங்கள் கருத்தையெல்லாம் படிக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி