|  ADDED : ஜூலை 20, 2025 12:20 PM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
ரியாத்: சவுதி அரேபியாவில் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் உயிரிழந்தார். அவருக்கு வயது 36.சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல், 36. இவர் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்தார். இவரை தூங்கும் இளவரசர் என மக்கள் அழைத்து வந்தனர். இவர் சவுதி அரேபியாவை கட்டமைத்த அரசர் அப்துல் அஜீசின் கொள்ளு பேரன் ஆவார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qgmj5zuv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2005ல், 15 வயது கொண்டவராக இருந்த இளவரசர், லண்டன் நகரில் ராணுவ பயிற்சி பெற்று வந்தார். அப்போது அங்கு நடந்த கார் விபத்தில் சிக்கினார். பலத்த காயம் அடைந்த அவர் கோமா நிலைக்கு சென்றார். 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் எந்த பலனும் அளிக்கவில்லை. கடைசியில் அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.அவரது மரணத்தை உறுதிப்படுத்திய இளவரசர் காலித் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆழ்ந்த சோகத்துடனும், துக்கத்துடனும், எங்கள் அன்பு மகன் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் இன்று காலமானார்' என்று கூறியுள்ளார். இறுதிச் சடங்கு இன்று (ஜூலை 20) ரியாத்தில் உள்ள மசூதியில் நடைபெற உள்ளது.