உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நம்பகத்தன்மை வாய்ந்த வங்கி டாப் 10 பட்டியலில் எஸ்.பி.ஐ.,

நம்பகத்தன்மை வாய்ந்த வங்கி டாப் 10 பட்டியலில் எஸ்.பி.ஐ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: உலகின் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த வங்கிகள் பட்டியலில், இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,), நான்காம் இடத்தில் உள்ளது.தேசிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, மத்திய அரசுக்கு சொந்தமானது; உலகம் முழுவதும் கிளைகள் அமைத்து செயல்படும் இந்த வங்கி தான், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக உள்ளது.சொத்து விகிதத்தில் 23 சதவீதம் சந்தை பங்களிப்பும், மொத்த கடன், டிபாசிட்டுகளில் 25 சதவீதம் சந்தை பங்களிப்பும் கொண்ட பிரமாண்டமான வங்கி. இரண்டரை லட்சம் பணியாளர்கள், 22 ஆயிரத்து 542 கிளைகளை கொண்ட இந்த வங்கி, உலகில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த வங்கிகளின் பட்டியலில், நான்காம் இடத்தில் இந்தியாவின் எஸ்.பி.ஐ., வங்கி இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் நியூஸ்வீக் இதழ் 66 முன்னணி வங்கிகளை தர வரிசைப்படுத்தியுள்ளது.அதில் உலகின் அனைத்து நாடுகளிலும் செயல்படும் முன்னணி வங்கிகள் இடம் பெற்றுள்ளன. வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள், நிதிச்சேவை வழங்குவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கருத்துகளின்படி, நம்பகத்தன்மை கொண்ட வங்கிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 70 பேர் இந்த கருத்து சேகரிப்பில் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் முடிவில் வெளியிடப்பட்ட பட்டியலில், டாப் 10 இடத்தில் இருக்கும் நம்பகத்தன்மை கொண்ட வங்கிகள் விவரம்:1.பேங்க் பி.சி.ஏ., - இந்தோனேசியா2.டி.பி.எஸ்., குரூப் - சிங்கப்பூர்3.பான்கோ தோ பிரேசில் - பிரேசில்4.எஸ்.பி.ஐ., - இந்தியா5.பேனர் பேங்க் - அமெரிக்கா6.டொரண்டோ டொமினியன் - கனடா7.யுனைடெட் பேங்க் - அமெரிக்கா8.லாயட்ஸ் பேங்கிங் - பிரிட்டன்9.எம்பேங்க் - போலந்து10.எஸ்.என்.பி., - ஸ்விட்சர்லாந்து


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
ஜன 28, 2025 02:22

காங்கிரஸ் காலத்தில் ஊழலால் பாதிக்கப்பட்ட கான்செர் நோயாளியாக வங்கியை உலகத்தரம் வாய்ந்ததாக ஒலிம்பிக் வீரனாக மாற்றிய பெருமை பிஜேபி அரசை மட்டுமே சேரும்.


Kundalakesi
ஜன 28, 2025 00:16

கர்நாடக அரசு பாரத வங்கி பிரச்னை தெரியுமா


சண்முகம்
ஜன 27, 2025 23:36

பெருங்கோடீஸ்வரர்களுக்கு மட்டும் உழைக்கும் வங்கி. சாமானியர்களை மதிக்காத வங்கி.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 22:24

அமெரிக்காவில் முதலீடுகளை தவறான முறையில் செய்ததற்காக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க FBI க்கு பல மில்லியன் டாலர்களை அபராதமாகச் செலுத்தியது இதே SBI ...... அதுவும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து .......


கல்யாணராமன்
ஜன 27, 2025 22:15

இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் பிரேசில் இருக்கும் வங்கியின் பெயரை கேள்வி பட்டதே இல்லை. அடுத்து இவை யாவும் அவ்வளவு பெரிய நாடுகள் கிடையாது, வங்கியின் கிளைகள் அதிகம் இருக்காது, பணியாளர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். அதே போல் டெபாசிட் கூட அந்த லட்சணத்தில்தான் இருக்கும். இவை மூன்றும் முதல் மூன்று இடமாம் இந்திய எஸ் பி ஐ நான்காம் இடமாம். என்ன கணக்கெடுப்பு இது? வேலை வெட்டி இல்லாத அரை வேக்காடு பேர்வழிகள் எடுக்கும் விவரங்களை செய்தியாக வெளியிட்டு குழப்பத்தை உண்டு பண்ண வேண்டாம்.


kgb
ஜன 27, 2025 22:07

sample collection 70 is very vey low....


Mohana sundaram London
ஜன 28, 2025 00:28

70 Persons engaged to collect data.


சமீபத்திய செய்தி