உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரகசிய போலீஸ் 007?: இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு ரகசிய பயணம்?

ரகசிய போலீஸ் 007?: இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு ரகசிய பயணம்?

கொழும்பு: இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் இலங்கைக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார். இவரது அலுவலகம் தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் இலங்கை பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர். இலங்கையில் வரும் செப்.21 ல் பொதுதேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர் . இலங்கையில் சீன படையினர் கப்பல் நிறுத்தும் முயற்சி ஒரு புறம் இருப்பதால், இந்தியா இலங்கை அரசியலை உற்று நோக்கி கவனித்து வருகிறது. இந்நிலையில் அஜித்தோவல் இலங்கை சென்றார். கொழும்பு பாதுகாப்பு மாநாடு நடக்கவுள்ள நிலையில் அவர் இலங்கை சென்றுள்ளார். இந்தியா, மாலத்தீவு, மொரிஷியஸ், வங்கதேசம் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்திய கடலோர பாதுகாப்பு , பிராந்திய ஒத்துழைப்பு ஆகியன குறித்து விவாதிக்கப்படும். இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினரையும் அஜித்தோவல் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kuppamuthu
ஆக 30, 2024 22:21

அஜித்தோவல் போன்ற திறமை மிக்கவர் இன்றைக்கு நமது நாட்டிற்கு தேவை. இங்கு தேவையில்லமல் அதானியை இனைக்கவேண்டாம்.


Easwar Kamal
ஆக 30, 2024 18:01

எல்லாம் போவானுங்க வருவனுங்க. நம்ம மீன்வர்களுக்கு ஒன்னும் செஞ்சாரா மாட்டானுவ. போய் அதானி கூட்டங்களுக்கு ரகசிய டீல் பேசிட்டு வருவனுவ. கிட்டதட்ட பிஜேபி அதானி ஓட பினாமி போன்று தன பார்க்க தோணுகிறது.


தமிழ்வேள்
ஆக 30, 2024 20:06

போதை கஞ்சா மருந்து பொருட்கள் என கண்டதையும் கடத்தல் செய்பவன் அகதிகளை கள்ள தனமாக இங்கு கொண்டு வருபவன் என மீன்பிடி தொழில் தவிர மற்ற எல்லா வகையான சட்ட விரோத செயல்கள் செய்யும் கிங் கெமிக்கல்ஸ் அல்லக்கை கும்பலுக்கு பெயர் மீனவர்களா? சொல்ல வெட்கமாக இல்லை? இந்த லட்சணத்தில் கடற்படை வீரரை கொலை வேறு செய்தால், இந்த சோ கால்டு மீனவர்களுக்கு விருதா கொடுப்பார்கள்?


lana
ஆக 30, 2024 20:10

எல்லை தாண்டி போனால் எந்த நாடும் கைது செய்யும். இதற்கு முன்பு 2004-2014 வரை சுமார் 500 பேர் சுட்டுக் கொலை பட்டனர் .அப்போது வாயில் என்ன இருந்தது.


Easwar Kamal
ஆக 30, 2024 18:00

எல்லாம் போவானுங்க வருவனுங்க. நம்ம மீன்வர்களுக்கு ஒன்னும் செஞ்சாரா மாட்டானுவ. போய் அதானி கூட்டங்களுக்கு ரகசிய டீல் பேசிட்டு வருவனுவ. கிட்டதட்ட பிஜேபி அதானி ஓட பினாமி போன்று தன பார்க்க தோணுகிறது,


S. Gopalakrishnan
ஆக 30, 2024 15:13

இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் ! பாரதத்தாயின் தவப்பதல்வன் !


தத்வமசி
ஆக 30, 2024 15:08

இந்த மிகப் பெரும் ரகசியத்தை யாருக்கும் தெரியாமல் எங்களுக்கு தெரியப் படுத்தியதற்கு நன்றி. நாங்களும் இதை பரம ரகசியமாக வைத்துக் கொள்கிறோம். ஹஹஹஹா


Hari
ஆக 30, 2024 18:36

You are Pakistan kothadimai?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை