உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மலேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து; மியான்மர் குடியேறிகள் 7 பேர் பலி; 100 பேர் மாயம்

மலேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து; மியான்மர் குடியேறிகள் 7 பேர் பலி; 100 பேர் மாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோலாலம்பூர்: மியான்மரில் இருந்து மலேஷியா நோக்கி சென்ற படகு கவிழ்ந்ததில்100 பேர் மாயமாகினர். இதுவரை மியான்மர் குடியேறிகள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இருந்து, புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு, படகு ஒன்று மலேஷியா நோக்கி சென்றது. மலேஷியாவின் பினாங்கு மாகாணம் அருகே சென்றபோது, அப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த மலேஷிய கடற்படை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியை துவக்கியது.இதுவரை மியான்மர் குடியேறிகள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 100 பேர் மாயமாகி இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக, மலேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இனப்படுகொலை, வறுமை உள்ளிட்ட காரணங்களினால் மியான்மரில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மலேஷியா, இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஆபத்தான முறையில் படகுகளில் பயணம் மேற்கொள்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
நவ 10, 2025 10:46

சிலவருடங்களுக்கு முன்பு, உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், மலேஷியா விலிருந்து புறப்பட்ட விமானம் ஏதோ பிரச்சினையில் சிக்கி விமானம் மற்றும் அதில் பயணித்த 350 க்கும் மேற்பட்டவர்கள் மாயம். இன்றுவரை அந்த விமானம் என்னவாயிற்று என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. இப்பொழுது மலேஷியா அருகில் மியான்மரிலிருந்து வந்த படகு மூழ்கி அதில் பயணித்த 100 க்கும் அதிகமானோர் மாயம். Bermuda Triangle கேள்விப்பட்டிருக்கிறோம். தெரியாதவர்கள் வலைதளத்தில் தேடி அது என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். அதுபோன்று மலேஷியா அருகில் இந்த மாயமான விஷயங்கள் நடப்பதால் Malaysia Miseries என்று கூறுவோமா?


Ramesh Sargam
நவ 10, 2025 10:40

பலநாட்டு போர்களை தடுத்து நிறுத்தும் டிரம்ப், மியான்மரில் நடக்கும் இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்தி, அடுத்த வருட நோபல் பரிசுக்கு முயற்சிக்கலாமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை